பிரபல
நடிகரான பிரதாப் சந்திரனின் மகன் அனூப் பிரசாத்,தந்தை பெயரில் பிரதாப்
புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி “உயிரின் ஓசை” என்ற படத்தை
தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரசவக் காட்சியை நேரடியாக
படமாக்குகிறார்கள் என்று மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்த
மலையாளத் திரைப்படமான ‘களிமண்’ தான் ‘உயிரின் ஓசை’ என்ற பெயரில்
உருவாகிறது.ஸ்வேதா
மேனன், பிஜூமேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன், சுனில்ரெட்டி,
அனுபம்கேர் ஆகியோரும் நடிதிருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு நடனமாடும் துணை
நடிகையாக இருக்கும் ஸ்வேதா மேனன் பல முயற்சிகளுக்குப் பிறகு கதாநாயகி
ஆகிறார். அந்த படத்தின் சிறப்பு காட்சியை காண வரும் அவரது கணவர் விபத்தில்
சிக்கி மூளைச் சாவுக்கு ஆளாகிறார். இனி பிஜூமேனன் உயிர் பிழைக்க முடியாது
என்கிற நிலமை உருவாகிவிடுகிறது.
மனைவியின்
லட்சியம் நிறைவேறுவதற்காக இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவு
செய்திருந்த பிஜூமேனன் எனக்கென ஒரு வாரிசு கூட இல்லையே’ என்று
கலங்குகிறார். பிஜூ மேனனின் ஆசையை நிறவேற்ற அவரது உடலிலிருந்து உயிரணுவை
எடுத்து ஸ்வேதாமேனனின் கருவறைக்குள் வைத்து அவளைத் தாயாக்குகிறார்கள். படப்பிடிப்பின்போது ஸ்வேதாமேனன் கர்பமாய்
இருந்ததால், அவரின் நிஜ பிரசவத்தை திரைப்படத்தில் சேர்க்க படமாக்கியதற்காக
பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு பெண் தாயாவது எவ்வளவு வேதனையானது
என்பதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காம கொடூரன்கள் இதை
பார்த்தாவது திருந்த வேண்டும் என்று கூறி ஸ்வேதாமேனன் எதிர்ப்புகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்தார் nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக