கொச்சி: குறைந்த கட்டணத்தில் பயணம் செய்பவர்களுக்கான, 'ஜனசதாப்தி'
ரயில்களில் உள்ள சிறிய சமையலறைகள், ரயில் பெட்டிகளில், கழிப்பறையாக
இருந்தவை என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி நகரங்களை இணைக்கும் வகையில், ஜனசதாப்தி என்ற பெயரில், குறைந்த
கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின், முன்னும் பின்னும், ரயில்
பயணிகளுக்கான, சமையல் அறை உள்ள பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த சமையல்
பெட்டி, பிற ரயில்களில் உள்ளது போல், பெரியதாக, முழுநீளமாக இல்லாமல், சிறிய
அளவில் இருந்ததால் சந்தேகம் அடைந்த, கேரளாவைச் சேர்ந்த, டி.பி.பினு
என்பவர், 'ரயில்வே அதாலத்' என்ற விசாரணை அமைப்பு மூலம், இது பற்றி கேள்வி
எழுப்பியிருந்தார்.அவருக்கு கிடைத்த பதிலில், 'ரயில்களில், கழிப்பறையாக
இருந்தது தான், சிறிய சமையலறையாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு கழிப்பறை அது பரவாஇல்லை இப்போது கழிப்பறை இல் கூட உணவு
தயாரிப்பார்கள் கேட்டால் பெட்டி பற்றாக்குறை என்று கூட சொல்வார்கள் அது
தான் ரயில் நிர்வாகம்.
இந்த ரயில்களுக்கு பெரிய அளவில், சமையலறை தேவையில்லை என்பதால், இந்த ஏற்பாட்டைச் செய்தோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், சமையலறைக்கு தண்ணீர் தேவை; தண்ணீர் கொட்ட, வாஷ் பேசின் தேவை. அந்த வசதிகள், கழிப்பறையில் இருப்பதால், அதை சற்று பெரிதாக்கி, சமையலறையாக மாற்றிக் கொண்டோம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கழிப்பறையை, சமையலறையாக பயன்படுத்துவதற்கு முன், அந்த அறை சுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே, சமையலறையாக பயன்படுத்தப்படுகிறது' என்றனர்.சில மாதங்களுக்கு முன், ஜன சதாப்தி ரயில்களில், சமையல் செய்ய பயன்படுத்தப்படும் தண் ணீர், அருகில் உள்ள கழிப்பறையில் இருந்து எடுக்கப்படுவதையும், தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்பட்ட, 'எலக்ட்ரிக் ஹீட்டர்' கருவி, துருப்பிடித்து இருந்ததையும், ஊடகங்கள் வெளிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. dinamalar.com

சுத்தப்படுத்தி விட்டோம்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக