ஆசாராமை கொலை வழக்கில் சிக்க வைக்க சதி: ஜம்மு ஆசிரம முன்னாள் நிர்வாகி கைது
ஜம்மு ஆசிரம வளாகத்தில் மனித எலும்புக் கூடுகளை புதைத்து வைத்து, ஆசாராம் பாபுவை கொலை வழக்கில் சிக்க வைக்க சதி செய்ததாக அந்த ஆசிரமத்தின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் ஒன்று, ஜம்மு பகவதி நகரில் உள்ளது. இந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக இருந்த போலோநாத், கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ""சாமியார் ஆசாராம்பாபு 3 குழந்தைகளை கொலை செய்து, அவர்களின் உடல்களை ஆசிரம வளாகத்தில் புதைத்து வைத்திருப்பதாக'' தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் அடிப்படையில், சமூக சேவகர் டாக்டர் ராஜ்குமார் என்பவர், ஆசாராம் பாபு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை ஜம்மு போலீஸார் தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையில், போலோநாத் ஆசாராம்பாபுவை கொலை வழக்கில் சிக்க வைப்பதற்காக, இடுகாட்டில் இருந்து வேறு மனித எலும்புக்கூடுகளை கொண்டு வந்து ஜம்மு ஆசிரம வளாகத்தில் புதைத்து வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து இந்த மனித எலும்புக்கூடுகளை இடுகாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்த விக்ராந்த் சர்மா என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவரை ஜம்மு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். விக்ராந்த் சர்மாவிடம் போலோநாத் தொலைபேசியில் பேசியதற்கான சி.டி. ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, போலோநாத் மீது குற்றச் சதியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் ஜம்முவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக