ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில், வெற்றி மட்டும் இலக்கல்ல; எதிர்த்து
போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் உட்பட, அனைவரையும் டெபாசிட் இழக்கச்
செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி தலைமை, உத்தரவு
பிறப்பித்து உள்ளது.ஏற்காடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., அதிக
முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில்
போட்டியிட்ட பெருமாள், பதிவான ஓட்டுகளில், 58.06 சதவீதம் பெற்று வெற்றி
பெற்றார்.அவரது மறைவைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல், இம்மாதம், 9ம் தேதி துவங்கியது. தி.மு.க.,
சார்பில், மாறன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், மறைந்த
எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜா நிறுத்தப்பட்டு உள்ளார்.லோக்சபா
தேர்தலுக்கு, முன்மாதிரி தேர்தலாக, ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல்
கருதப்படுவதால், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், வெற்றிக்கு முட்டி
மோதுகின்றன. இரண்டு கட்சிகளின் பணபலம் மற்றும் ஆள்பலத்திற்கு ஈடு கொடுக்க
முடியாததால், மற்ற கட்சிகள் ஒதுங்கிக் கொண்டன. மொத்ததில மக்களுக்கு நல்லது பண்ண மாட்டீங்க , 62 பேர் 33 அமைச்சர்களும் ஏற்காட்டில் இருந்தா தமிழ் நாட்டை காப்பாத்துறது யாருப்பா...
லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக, முதல்வர் ஜெயலலிதாவை முன்னிறுத்தி, பிரசாரம் செய்ய, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில், ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி அமைய வேண்டும் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்து, 1989ல், சட்டசபை தேர்தலை சந்தித்தபோது, அ.தி.மு.க., ஜெ., அணி சார்பில் போட்டியிட்ட பெருமாள், வெற்றி பெற்றார்.எனவே, நடைபெறும் இடைத்தேர்தலில், வெற்றி பெற்றால் மட்டும் போதாது. எதிர்த்து போட்டியிடும், அனைத்து வேட்பாளர்களும், டெபாசிட் இழக்கும் வகையில், வெற்றி அமைய வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டு உள்ளது.
இழுப்பு:உத்தரவை நிறைவேற்றும் வகையில், அ.தி.மு.க., சார்பில், தேர்தல் பொறுப்பாளர்களாக, 33 அமைச்சர்கள் உட்பட, 62 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவருக்கும், குறிப்பிட்ட பகுதி பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது. "ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுகளை, கட்சிக்கு ஆதரவாக மாற்ற வேண்டும். தி.மு.க.,விற்கு ஆதரவாக உள்ளவர்களையும், வளைக்க வேண்டும்' என, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கேற்ப, அ.தி.மு.க.,வினர் பணியை துவக்கி உள்ளனர். தி.மு.க.,வினரை கட்சிக்கு இழுப்பது அல்லது அமைதியாக இருக்க வைப்பது என, முடிவு செய்து, அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல், தி.மு.க.,வினர், வெற்றி பெற முடியாவிட்டாலும் பரவாயில்லை. மோசமான தோல்வியை தழுவி விடக்கூடாது என்ற முனைப்புடன், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளனர். எனவே, தேர்தல் நெருக்கத்தில், ஏற்காடு தொகுதியில், பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com
உத்தரவு:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக