பத்திரிக்கையாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஆர்யா “ இரண்டாம் உலகம் திரைப்படத்தைப்
பற்றி செல்வராகவன் சொன்ன அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. இந்த படம்
தமிழ் சினிமாவில் புது முயற்சியாக இருக்கும். செல்வராகவன் விவரித்த
பிரம்மாண்டத்தை பட்ஜட் பிரச்சனை வராமல் திரைப்படமாக நினைத்த மாதிரி எப்படி
எடுக்கப் போகிறார்? ஒரு நடிகன் என்பதை விட ஒரு ரசிகனாக அத்தனை
விஷயங்களையும் ஒரே படத்தில் செல்வராகவன் எப்படி சொல்லப்போகிறார்? என்ற
கேள்வியும், படத்தைப் பார்க்கும் ஆர்வமும் எனக்கு அதிகமாக இருந்தது. நான்
இன்னும் படம் பார்க்கவில்லை. இரண்டாம் உலகம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு
விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று
கூறினார்.
இரண்டாம் உலகம் திரைப்படத்தின் ஹீரோயின் அனுஷ்கா “இரண்டாம் உலகம் வித்தியாசமான, அழகான கதை. இந்த கதைக்கு ஹீரோயினாக நான் தான் பொருந்துவேன் என்று சொல்லமுடியாது. எந்த ஹீரோயினாலும் செய்யக்கூடிய விதத்தில் திரைக்கதை அமைத்து, கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் செல்வராகவன், என்னை நடிக்கவைத்ததில் நான் பெருமை அடைகிறேன். சிறிய குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய விதத்தில் ஒருபுது உலகத்தை செல்வராகவன் உருவாக்கியிருக்கிறார்” என்று பேசினார்.

ஆங்கில படத்தின் தழுவல் இல்லை - செல்வராகவன்!
இயக்குனர்
செல்வராகவன் பேசிய போது “இரண்டாம் உலகம் கதையை எழுதி சில
தயாரிப்பாளர்களிடம் சொல்லும்போது, இந்த கதை படிக்க நன்றாக இருக்கும் ஆனால்
திரையில் படமாக காட்டமுடியாது என்று சொன்னார்கள். எனவே இதை நான் ஒரு
சேலஞ்சாக எடுத்துக்கொண்டு செய்தேன். இது ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று
பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. ஹாரிஸ் ஜெயராஜுக்கும் எனக்கும் சண்டை
உண்டாதனால் தான் அனிருத் பின்னணி இசைக்கு சேர்க்கப்பட்டார் என்றும்
பேசுகிறார்கள். படப்பிடிப்பு முடிய திட்டமிட்டதைவிட அதிக நாட்கள்
ஆகிவிட்டதால் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பு
தரப்பிலிருந்து அவசரப்படுத்தினார்கள். எனவே தான் அனிருதை பின்னணி இசையமைக்க
படக்குழுவுடன் சேர்த்தோம்” என்று கூறினார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக