பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்சில் 7000-த்திற்கும் மேற்பட்ட
தீவுகள் உள்ளன. வருடத்திற்கு 20 பெரும் புயல்களை சந்திக்கும்
பிலிப்பைன்சில் நேற்று நாட்டின் மையப்பகுதியில் ஹையான் என்ற கடும் சூறாவளி
தாக்கியது.
மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளிக்கு லெய்ட்
மாகாணத்தின் டாக்லோபான் நகரின் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும்
தரைமட்டமாயின. 2,22,000 மக்களை கொண்ட இந்நகரில் 100-க்கும் மேற்பட்டோர்
ஆங்காங்கே இறந்து கிடந்தனர்.
மேலும் சூறாவளிக்காற்றுடன் 10 மீட்டர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல்
அலைகள் தாக்கியதில் கடற்கரை நகரங்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டன.
மின்சாரம், சாலை போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவம்
மற்றும் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாததால்
உயிருக்காக பலர் போராடிக் கொண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக