‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது பெற்ற அவர் தொடர்ந்து தமிழில் மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார். ஆனாலும் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்றோரின் படங்கள் போல் அவர் படங்கள் பெரிதாக ஓடவில்லை. சமீபத்தில் நடித்த கன்னட, தெலுங்கு படங்களும்
கைகொடுக்கவில்லை.
பிரியாமணி நல்ல கதைகள், திறமையான டைரக்டர்கள் பெரிய ஹீரோக்களை தேர்வு செய்து நடிக்காததே சரிவுக்கு காரணம் என்கின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஓரிரு படங்களை தேர்வு செய்து நடித்தார். அனுஷ்காவின் அருந்ததி போல் தனக்கு இப்படங்கள் பெயர் வாங்கி தரும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்தாட்டம் போட்டு மேலும் இமேஜை இறக்கி கொண்டார். இனிமேல் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக