புதன், 13 நவம்பர், 2013

சி பி அய் மீது கனிமொழி நஷ்ட ஈடு கோரவேண்டும் ! அரசியல் விரோதமா ஜாதி / திராவிட விரோதமா ?

3854625319_2bd6942499_b


”கனிமொழி தரப்புல என்ன சொல்றாங்க.. ? ”

 கலைஞர் டிவியின் நிதி ஆலோசகர் ராஜேந்திரனோட வாக்குமூலத்தின்படி, கனிமொழிக்கும் 200 கோடி கடன் வாங்கின கலைஞர் டிவி மீட்டிங்குக்கும் சம்பந்தம் இல்லன்னு ஏற்கனவே ராஜேந்திரன் சொல்லியிருந்தார்.  இப்போ, இந்த வழக்கில் சாட்சியம் சொன்ன, இந்த வழக்கின் உதவிப் புலனாய்வு அதிகாரி எஸ்.பி.சின்ஹா, 200 கோடி வாங்கணும்னு முடிவெடுத்த கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை, தயாளு மற்றும் சரத்குமார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் னு சாட்சி சொல்லியிருக்கார்.  இது கனிமொழியை இந்த வழக்குல இருந்து முழுமையா விடுவிக்கும். அதனாலதான் இத்தனை மகிழ்ச்சியா இருக்காங்க... ”
”சரி தம்பி... 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளலைன்றது இன்னைக்குத்தான் சிபிஐக்கு புதுசா தெரிஞ்சுச்சா ? ”
”அண்ணே... கலைஞர் டிவியோட போர்டு மீட்டிங்குகள் தொடர்பான மினிட் புக், புலனாய்வு அதிகாரியால 18.03.2011 அன்னைக்கு பறிமுதல் பண்ணப்பட்டுச்சு.. அந்த புத்தகத்தைப் பார்த்தாலே அந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டது தயாளுவும், சரத்குமாரும் மட்டும்தான்னு தெளிவா தெரியும்.”
D742-KTV-Minutes2_Page_3
”அப்புறம் ஏம்பா கனிமொழியை சிபிஐ கைது பண்ணாங்க.. ? ”
D742-KTV-Minutes2_Page_1தயாளு அம்மாவுக்கு வயசாயிட்டதால, அவங்களால போயி திஹார் ஜெயில்ல இருக்க முடியாதுன்னுதான், கனிமொழியை காவு கொடுத்தாங்க.. ?
”அதுதான் சிபிஐ...  கனிமொழிக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சே கனிமொழியை கைது பண்ணாங்க.  இப்போ கனிமொழி மேல சாட்சியங்கள் இல்லன்னு சொல்லிட்டாங்க.  ..சவுக்கு டாட் com

கருத்துகள் இல்லை: