அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும்
குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான
இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். நிபுணரான விவேக் எச்.
மூர்த்தியை அமெரிக்காவின் மிக உயரிய நிர்வாக பதவிக்கு இந்தியரான மூர்த்தியை
ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார்.
இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்குமானால், அமெரிக்க வரலாற்றிலேயே
மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான பெருமைக்குரியவராக
மூர்த்தி விளங்குவார்.ஹார்வார்டு மருத்துகல்லூரியில் மருத்துவம் பயின்ற அவர், தற்போதைய சர்ஜன்
ஜெனரலான உள்ள ரெஜினா பெஞ்சமின் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்பார்.
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், இணை நிறுவனராகவும் உள்ள
மூர்த்தி, ஹார்வார்டு மருத்துவ நிறுவனத்தின் மருந்தியல் பிரிவின்
மருத்துவர் மற்றும் பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறிய இவரின் பூர்விகம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டமாகும்
ஒபாமாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
ஒபாமாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக