தொலைக்காட்சி விவாதத்தில்
விபரீதம் உண்டாக்கிய நேயர் :
டிவி அதிபர் வீட்டில் போலீஸ் நுழைந்தது சத்யம்
தொலைக்காட்சியில் இன்று இரவு ‘’சத்யம் - அது சாத்தியம்’’நிகழ்ச்சி 8.10
மணியில் இருந்து 8.30 மணி வரை சென்றது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
அகற்றியது சரியா? தவறா? என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ்
சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ., பாஜக மாநில பொருளாளர் சேகர் ஆகியோர்
பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர்.நிகழ்ச்சியின்
இடையே பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி வழியாக கருத்துக்கள் பெறப்பட்டுக்
கொண்டிருந்தது. அப்போது தமிழ்தாசன் என்ற நேயர், தன்னை மதிமுக பிரமுகர்
என்று அறிமுகப்படுத் திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.அவர்,
‘’முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி பேச
காங்கிரசுக்கும், முதல் வருக்கும் என்ன தகுதி உள்ளது? என்று கேட்டதாக
சொல்லப்படுகிறது. அப்போது, விஜயதாரணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே,
தமிழ்தாசன் என்ற குரலுக்கு சொந்தக்காரர் மிகவும் தவறான வார்த்தை களால்
விஜயதாரணியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் திட்ட ஆரம்பித்துவிட்டதாக
தெரிகிறது.இதையடுத்து
விஜயதாரணி, ஆவேசமடைந்து தமிழ்தாசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று சத்தம்
எழுப்பினார். சத்யம் டிவி நிறுவனத்தையும் எச்சரித்தார்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சத்யம் டிவியின் சத்யம் சாத்தியம் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரவிந்தன், மற்றும் ஆசிரியர் விஜயரங்கன் உள்ளிட்டோர் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விஜயதாரணி அதற்கு ஒப்புக் கொள்ள வில்லை.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சத்யம் டிவியின் சத்யம் சாத்தியம் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரவிந்தன், மற்றும் ஆசிரியர் விஜயரங்கன் உள்ளிட்டோர் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விஜயதாரணி அதற்கு ஒப்புக் கொள்ள வில்லை.
இந்த
சூழ்நிலையில் சத்யம் டிவியின் அதிபர்களில் ஒருவரான ஐசக் பால் லிவிங்ஸ்டன்
வீட்டிற்கு அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ் தலைமையிலான
போலீசார் சென்றுள்ளனர். அவரிடம் விளக்கம் கேட்ப்படும் என்று தெரிகிறது.
இன்னொரு பங்குதாரரான சகோ. மோகன் சி.லாசரர்ஸ் வீட்டிற்கும் போலீசார்
சென்றுத்தளதாக் தெரிகிறது.
நள்ளிரவில் கைது நடவடிக்கை இருக்கலாம் என்ற அசாதாரண சூழல் அங்கு நில nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக