செவ்வாய், 12 நவம்பர், 2013

மங்கள்யான் in trouble நிலை நிறுத்தும் முயற்சியில் தொய்வு !

சென்னை: 'மங்கள்யான்' செயற்கைக்கோளை, நான்காவது முறையாக, ஒரு லட்சம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆராயும், "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்'திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில்,"மங்கள்யான்' செயற்கைக்கோள், நவம்பர், 5ம் தேதி, விண்ணில் ஏவப்பட்டது. பெங்களூருவில் உள்ள, "பீன்யா' கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. நவம்பர், 7ம் தேதி அதிகாலை, பூமியில் இருந்து, 28,814 கி.மீ., உயரம்; 8ம் தேதி அதிகாலை, 40, 186 கி.மீ., உயரம்; 9ம் தேதி, 71,623 கி.மீ., உயரம் என, "மங்கள்யான்' செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை, 2:06 மணிக்கு, கட்டமாக, ஒரு லட்சம் கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தும் பணி துவங்கியது. ஆனால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
ஐநூறு கோடியை வீணடித்து விட்டார்கள். இதற்கு ஆயிரம் ஊர்களில் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறைகள் கட்டி இருக்கலாம். இன்னும் பத்து நாட்களில், மங்கல்யான் மங்களகரமாக பூமிக்கு திரும்பிவிடும்.


இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, செயற்கைகோள் அடையவில்லை.இதுகுறித்து, "இஸ்ரோ' விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,"செற்கைக்கோளில் உள்ள ராக்கெட் தன் செயல்பாட்டை பாதியிலேயே, நிறுத்திக் கொண்டதால், "மங்கள்யான்' செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாமல் போனது. 12ம் தேதி(இன்று) அதிகாலை, 5:00 மணிக்கு, செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட் இயக்கப்பட்டு, ஒரு லட்சம் கி,மீ., உயரத்தில் நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம், 100 சதவீதம் பாதுகாப்பாக இயங்குகிறது. டிசம்பர் 1ம் தேதி, செவ்வாய் கிரகத்துக்கான பாதையில், "மங்கள்யான்' தன் பயணத்தை துவங்கும்' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: