ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட
‘மங்கள்யான்' விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி
முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் ‘மங்கள்யான்' விண்கலம்
நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
'மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு
இதனைத் தொடர்ந்து கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின்
சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது. 8-ஆம் தேதி 2வது
முறையாகவும், 8-ஆம் தேதி 3வது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையை
அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
விண்கலத்தின் பாதையை 4-வது முறையாக அதிகரிக்கும் முயற்சியின்போது சிறிய
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிறகு, அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதால்
விண்கலம் திட்டமிட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
நவம்பர் 16-ஆம் தேதியுடன் இந்தப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும் என
தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று அதிகாலையில் 1.27 மணிக்கு சுற்றுவட்டப்
பாதை 5-வது மற்றும் கடைசி முறையாக அதிகரிக்கப்பட்டது.
மங்கள்யான் விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை தற்போது 1 லட்சத்து 92
கிலோமீட்டராக அதிகரிப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘மங்கள்யான்' விண்கலம்
படிப்படியாக அதன் தூரத்தை அதிகப்படுத்தி செவ்வாயை நோக்கி பயணமாகும்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக