சனி, 16 நவம்பர், 2013

ஸ்ரீ வித்யாவை கொள்ளை அடித்த சினிமா அரசியல்வாதி கணேஷ்குமார் அவரது சிகிச்சைக்கு கூட பணம் கொடுக்க மறுத்துவிட்டான் ! டாக்டர் அதிர்ச்சி தகவல்



சென்னை:கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் டாக்டர். இறுதி நாட்களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள
கேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி தர மறுத்த ஸ்ரீவித்யா, தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த கமலை மட்டும் நேரில் சந்திக்க அனுமதி தந்தார். இதற்கிடையில் தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றினார் ஸ்ரீவித்யா. அவரது சிகிச்சை செலவுக்கு
அறக்கட்டளையிடம் பணம் கேட்டபோது தர மறுத்துவிட்டனர். இதுபற்றி ஸ்ரீவித்யாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணன் நாயர் கூறும்போது, ‘ஸ்ரீவித்யாவுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார். தனது சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் ஸ்ரீவித்யா. அவர்களிடம் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்டபோது தர இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். மருந்து நிறுவனம் ஒன்றுதான் சலுகை விலையில் ஸ்ரீவித்யாவுக்கு மருந்துகளை வழங்கியது என்றார்

பழம் பெரும் காங்கிரஸ் வாதியும் அமைச்சருமான பாலகிருஷ்ணா பிள்ளை பெரும் ஊழலில் சிக்கி ஜெயில் சென்றவர் .இவரின் மகன் மலையாள சினிமா நடிகனாகி பின்பு அரசியலில் அமைச்சரும் ஆகிவிட்டார், இவர்தான் ஸ்ரீ வித்தியாவின் சொத்துக்களை இன்றுவரை கையளிக்காமல் அனுபவித்து வருகிறார்,

திருவனந்தபுரம் : கேரளாவில் கேரளா
காங்கிரஸ் (பி) கட்சி தலைவராக இருப்பவர் பாலகிருஷ்ணபிள்ளை. இவர் பல முறை அமைச்சராக இருந்துள் ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் இடமலையார் நீர் மின் திட்ட ஊழல் வழக்கில் இவருக்கு உச்சநீதிமன்றம் 1 வருட சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் தனக்கு பதிலாக மகன் கணேஷ்குமாரை நிறுத்தினார். பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேஷ்குமார் வனம், விளையாட்டு மற்றும் சினிமாத்துறை அமைச்சரானார். இதன்பின், தண்டனை முடிந்து விடுதலையான பாலகிருஷ்ணபிள்ளை அமைச்சர் பதவியை தனக்கு தரக்கோரி மகனை
நிர்ப்பந்தித்தார். ஆனால், கணேஷ்குமார் ராஜினாமா செய்யவில்லை. இதையடுத்து தனது மகனை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு பாலகிருஷ்ணபிள்ளை முதல்வர் உம்மன்சாண்டியிடம் வலியுறுத்தினார். ஆனால், அவரும் மறுத்து விட்டார்.


 இந்நிலையில், கணேஷ்குமாரின் மனைவி யாமினி தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித் தார். இதையடுத்து கணேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் கணேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு, மனைவிக்கு சொத்தில் பங்கு கொடுத்து சமரசம் செய்தார். வழக்குகளை யாமினி வாபஸ் பெற்றார். இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, தன்னை மீண்டும் அமைச்சராக்குமாறு தந்தையிடம் கோரினார். பாலகிருஷ்ண பிள்ளையும் இதை ஏற்று நேற்று முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அதில் தனது மகன் கணேஷ்குமாரை மீண்டும் அமைச்சராக்க வேண்டுமென கோரியுள்ளார். இதுகுறித்து மே 30ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் தெரிவிப்பதாக முதல்வர் உம்மன் சாண்டி கூறினார். தனது மகனை பதவியிலிருந்து நீக்க தீவிரம் காட்டிய பாலகிருஷ்ணபிள்ளை, மீண்டும் அவரை அமைச்சராக்க கோரிக்கை விடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவரை அமைச்சராக்குவதற்கு காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: