![]() |
ந. சரவணன் : இலங்கை தமிழர்கள் சிலர் தீவிர தமிழ்த்தேசிய பற்றாளர்களாக தங்களை காட்டிக்கொள்கின்றனர். தற்போதைய தேர்தலிலும் பங்களிப்பு செய்கின்றனர்.
தமிழ்கத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழ்த்தேசியம் என்ன செய்தது என்றால்,
இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்பதற்கு லாபி செய்கிறது.
குறிப்பாக சீமான் பேசும் தமிழ் தேசியம் இதுவரை, இந்த மக்களுக்கு அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான இந்திய குடியுரிமை குறித்த பெரிதாக எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.
எது எதற்கோ, போராட்டம் செய்யும் ஒரு அரசியல் கட்சி, இதுவரை தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ஒரு போராட்டம் கூட செய்யவில்லை. ஒரு துண்டு பிரசுரங்களையும் அச்சடிக்கவில்லை.
மாறாக, அவர்கள் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை எனும் குற்றச்சாட்டு வைக்கும் திராவிட கட்சிகள் தான் இதுவரை தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வழங்கப்படும் வீடுகளில் தரக்குறைப்பாடு இருந்தால், ஒப்பந்ததாரருக்கு எதிராக குரல் எழுப்பாமல், அரசு தமிழர்களுக்கு துரோகம் இளைக்கிறது என்று மட்டும் கதை கட்டுவார்கள்.
(இணைப்பிலுள்ள அரசு ஆணைகளே அதற்கான சாட்சி )
இதில், ஏதாவது ஒரு கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக இதுவரை ஏதேனும் ஒரு துண்டறிக்கை, ஒரு போராட்டம், ஒரு அடையாள உண்ணாவிரதம் இப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், இந்த மக்களின் கோரிக்கை மற்றும் தொண்டு நிறுவனங்களின் பரிந்துரையினடிப்படையில் இத்தனையும் செய்திருக்கிறது திராவிட கட்சிகள்.
ஆனால், சிறப்பு முகாம் குறித்து தீவிர கவனம் செலுத்துவார்கள், காரணம் வெளிநாடுகளிலிருந்து வரும் திரள் நிதி நின்றுவிட கூடாது என்பதற்காக...கூடுதலாக, முகாம்களில் மாவீரர் தினம் கொண்டாட தூண்டுவது, அது தொடர்பான உரையாடலை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்று இலங்கை தமிழர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு எதிரானவற்றை செய்ய உறுதுணையாக செயல்படுவது தான் அவர்கள் வேலை.
ஆனாலும், தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலிருந்து சிலர் இன்னும் இந்த சீமான் தமிழ்த்தேசியம் தான் இலங்கையில் தனி நாடு வாங்கி கொடுக்கப்போகிறது என்றும், அமைப்பின் தலைவர் பெயரை எல்லோரும் அறியும்படி செய்தார் என நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர் அறிமுகம் செய்யாமலே இங்கு தமிழ்நாட்டில் அவர் பெயர் பிரசித்தம். அவர் கூறும் அத்தனையும் தமிழ்த்தேசியம் என நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவரும் அவரது கட்சியும் அகதிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை. மாறாக அவர்களுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதால் சில தனிப்பட்ட வகையில் சில அனுகூலத்தையும், இலங்கை தமிழர் என்றால் வீரம், தீரம், மாண்பு, உண்மையான தமிழ் போன்று, தமிழ்நாட்டில் இருப்பவர்கள், மேற்குலக நாடுகளுக்கு சென்றால், இலங்கை தமிழர்களால் கிடைக்கும் அனுகூலத்தில் கிடைக்கும் உபச்சாரத்திற்காகவும், விருந்திற்காகவும் சற்று கூடுதலாக அடித்துவிட்ட ஒருசில வரிகளை தனதாக்கிக்கொண்டு அதன் மூலம் ஆதாயமடையலாம் என்பதாக தான் இருக்கிறது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இடைநிலைச் சாதியர்களினால் கொண்டாடப்படும் ஆண்ட பரம்பரை பட்டத்தை, தலைவர் பெயரை வைத்து பெருமை பேச மட்டுமே உபயோகப்படும். அதை தாண்டி எந்த பயனுமில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக