மு.க. அழகிரிக்கு 2008-ல் எஸ்.ஆர்.கோபி எழுதிய கடிதம் ஒன்று, அவர் வீட்டில் இருந்து கண்டெடுக் கப்பட்டது என்று கூறி, ஒரு பகீர்க் கடிதத் தகவலைப் பரப்பி, உ.பி.க்கள் தரப்பில் பதட்ட நெருப்பை பற்றவைத்தனர் காக்கிகள். அதில் "சீனிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தை எரித்தது, அக்னிராஜ் வீட்டில் காரை எரித்தது, பி.டி.ஆர். அலுவலகத்தில் கண்ணாடி உடைத் தது, கடைசியாக தா.கி.விவகாரம். இவையெல்லாமே நீங்கள் சொல்லித்தான் நான் செய்தேன்' என்ற வாசகங்கள் இருந்ததாகவும் கந்தகத் தகவல்கள் பரவின.
இது குறித்து நாம் விசாரித்தபோது இது போர்ஜரி யாகத் தயாரிக்கப்பட்ட கடிதம் என்ற உண்மை வெளிப் பட்டது. ஆட்சிமாற்றம் நடந்ததுமே சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு போலீஸ் டீம், தா.கி. கொலை வழக்கில் இணைக்கப்பட்டிருந்த எஸ்.ஆர்.கோபி, அட்டாக் பாண்டி, கராத்தே சிவா, பாம்பு முருகன் போன்றோரை தனியே கொண்டுபோய் வைத்து ‘"தா.கி.கொலை விவகாரத்தில் நடந்ததை அப்படியே ஒப்பித்தால் உங்களை நாங்கள் தொந்தரவே செய்யமாட்டோம்' என நைச்சியமாய்ப் பேசி தகவல் கறக்க முயன்றதோடு, இவர்களிடம் வெத்துப் பேப்பர்களில் கையெழுத் தையும் வாங்கிக் கொண்டது. இப்படி எஸ்.ஆர். கோபியிடம் கையெழுத்து வாங்கப்பட்ட தாளில், காக்கிகளே மேற்சொன்ன மாதிரி கடிதத்தை தயாரித்து எஸ்.ஆர்.கோபி. வீட்டில் நடத்திய சோதனையின்போது எடுத்தோம் என்று சொன்னது. இதில் காவல்துறை ஒரு விசயத்தைக் கோட்டைவிட்டது. கோபியிடம் கையெழுத்து வாங்கியவர்களுக்கு அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கையெழுத்து மட்டுமே போடுவார் என்ற விபரம் தெரிந்திருக்க வில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக