வெள்ளி, 2 ஜூலை, 2010

இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கும் இடம் உண்டு என்று முதல்வர் கருணாநிதி

பொறியியல் படிப்பில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கும் இடம் உண்டு என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை அகதியின் மகனாகப் பிறந்த ஒருவர் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்ற நிலையிலும் அவருக்கு பொறியியல் கல்வி பயில வாய்ப்பு தரப்படவில்லை என பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

இதற்கு விளக்கம் அளித்து, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

பாதிக்கப்பட்டதாக தெரிவித்த மாணவரே உயர்கல்வித் துறை அமைச்சரைச் சந்தித்து தனது குறையைத் தெரிவித்தார். உடனடியாக, அவரது குறை களையப்பட்டு அவர் தொழிற் கல்வி பயில வாய்ப்பு தரப்பட்டு விட்டது. அது மாத்திரமல்ல, பொதுவாகவே தமிழகப் பள்ளிக் கூடங்களில் படித்த இலங்கை அகதிகளுடைய குழந்தைகளைப் பொதுப் பட்டியலில், தரவரிசையின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: