வெள்ளி, 2 ஜூலை, 2010

சரத்பொன்சேகா எச்சரிக்கை ,விடுதலைப்புலிகள் தொடர்பான விசாரணைகளை ்கேபி குழப்பிவிடுவார்

முன்னாள் விடுதலைப்புலிகளின் பிரதம  ஆயுத தரகர் குமரன் பத்மநாதன் (கேபி) ஒரு பயங்கரவாதி என்பதால் விடுதலைப்புலிகள் தொடர்பான விசாரணைகளை  இவர் குழப்பிவிடுவார் என்றும் அவர்மீது நம்பிக்கை வைக்கவேண்டாம் என்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கே.பி.கைது செய்யப்பட்டு  நீண்ட நாட்களாகியும் அரசாங்கம் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தவறியது ஏன் என்று ஊடகவியலாளர் கேட்டபோது, முன்னாள் விடுதலைப்புலி தலைவர் கே.பி.யுடன் அரசாங்கம் இணைந்து செயல்படுவது யுத்தத்தில் உயிரிழந்த சகல பாதுகாப்பு படையினரையும் அவமதிப்பதாகும்  என்று ஜெனரல்  பொன்சேகா தெரிவித்தார்.
அரசாங்கம் கே.பி.யை சிறையிலிடாமல் இருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார். இந்த நபரிடம் பெரும் தொகை பணம் இருக்கிறது. அரசாங்கம் இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் அல்லது இவரை சிறையிலிடாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். எத்தனையோ பிரிகேடியர்கள், ஜெனரல்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள போது பயங்கரவாதிகள் சுகபோகம் அனுபவிப்பது வெட்கக்கேடான விடயமாகும்.
யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் அபிவிருத்தி திட்டங்களிலும் நல்லிணக்க நடைமுறைகளிலும் புலம்பெயர் தமிழர்களை ஈடுபடச் செய்வதற்கு அரசாங்கம் கே.பி.யின் உதவியை நாடியுள்ளது.   தமிழர் தேசிய கூட்டமைப்பினாலும் புலம் பெயர் தமிழர்களாலும் இந்தக் கோரிக்கை இதுவரை அலட்சியப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: