புதன், 30 ஜூன், 2010

பிரதமர் வீட்டில் இருந்து ஏர்ப்போர்ட்டுக்கு சுரங்க பாதை



பிரதமர் அலுவலகம் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது. பிரதமர் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ள இருப்பதால் தரைவழியாக காரில் விமான நிலையத்துக்கு செல்கிறார்.

 பிரதமர் செல்லும் போது அந்த சாலையில் போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மற்ற வாகனங்கள் நின்று கிளம்பும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
இதை தவிர்க்க பிரதமர் வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்க பாதை அமைக்க ஆலோசிக்கப்படுகிறது.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் சுரங்க ரெயில்பாதையை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இதே போல் பிரதமர் அலுவலகத்துக்கும் விமான நிலையத்துக்கும் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனிடம் பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் ஆலோசனை கேட்டுள்ளனர்.

இது குறித்து மந்திரிசபை செயலகத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் விமான போக்கு வரத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: