வியாழன், 1 ஜூலை, 2010

தனுஷ், ஆன்டிரியாவை வைத்து மின்னல் வேகப் படத்தை இயக்கப் போகிறாராம் செல்வா

படு நிதானமாக படம் எடுப்பதில் புகழ் பெற்றவரான செல்வராகவன் சுருக்கமாக ஒரு படத்தை எடுத்து வெளியிடவுள்ளாராம்.

ஒரு படத்தை எடுத்து முடிக்க 2 வருடம் வரை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்பவர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு இடைவெளி விட்ட செல்வராகவன், தெலுங்கில் ராணா டகுபதியை வைத்து ஒரு படம் செய்வதாக இருந்தார். ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக அந்த திட்டம் டிராப் ஆகி விட்டதாம்.

இதையடுத்து தம்பி தனுஷ், தோழி ஆன்டிரியாவை வைத்து ஒரு மின்னல் வேகப் படத்தை இயக்கப் போகிறாராம் செல்வா. ராம்ஜி கேமராவைக் கையாள,ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது குறுகிய காலப் படைப்பாக இருக்குமாம்.

இது புதிய படம் அல்ல. ஏற்கனவே தனுஷ், ஆன்டிரியாவை வைத்து திட்டமிடப்பட்டிருந்த மாலை நேரத்து மயக்கம்தான். இந்தப் படம் 14 நாள் படமாக்கலுக்குப் பின்னர் படத்தை நிறுத்தி வைத்திருந்தார் செல்வா. காரணம், ஆன்டிரியாவுக்கும், செல்வாவுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் நட்பு. இதன் விளைவுதான், சோனியா அகர்வாலும், செல்வாவும். அந்தப் படத்தைத்தான் தற்போது திரும்ப எடுக்கவுள்ளார் செல்வா.

தனுஷுடன் இணைந்து செல்வராகவன் செய்யும் 4வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 2 முதல் 'குவார்ட்டர் ஃபைட்' தொடக்கம்!

கருத்துகள் இல்லை: