புதன், 30 ஜூன், 2010

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் ஆபரணங்கள் தொடர்பான பயிற்சி நெறி!

மாணிக்கக் கல் ஆபரண ஆராய்ச்சிப் பயிற்றுவிப்பு நிலையம் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஆபரணங்கள் தொடர்பான பயிற்சி நெறியொன்றை நடத்தவுள்ளது.

மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மேற்படி ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே இப்பயிற்சி நெறி நடாத்தப்படவுள்ளது.

மாணிக்கக்கல் வெட்டுதலும் பட்டை தீட்டுதலும் குடாவெப்பப் பரிகரணம் கணனி உதவியுடனான ஆபரண உற்பத்தி நிறத்தரப்படுத்தலும் சந்தைப்படுத்தலும் மாணிக்கக்கல்லின் ஆபரண வடிவமைப்பு போன்ற பயிற்சிகளே வழங்கப்படவுள்ளன.

மேற்படி பாடநெறிக்களுக்கு வயதெல்லை மட்டுப்படுத்தப்படவில்லையென்று தெரிவித்துள்ள நல்லூர் பிரதேச செயலர் பா. செந்தில் நந்தனன் ஆர்வமுள்ளவர்கள் நல்லூர்ப் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உதவியாளருடன் தொடர்பு கொண்டு விண்ணப்படிவங்களைப் பெற்றுப் பூரணப்படுத்தி எதிர்வரும் யூலை 20 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: