சனி, 3 ஜூலை, 2010

சசிகலா, ஜெ.கொடநாடு எஸ்டேட் 900 ஆயிரம் ஏக்கர் ,பங்களாக்கள், அழகான ஏரி, படகுகள் ,500 தொழிலாளர்கள்

 மினி போயஸ்கார்டனில் விதிமுறை மீறிய கட்டடம்; அதிகாரிகள் குழு இன்று நுழைகின்றனர்
ஊட்டி : கொடநாடு எஸ்டேட்டில் புதிய கட்டடம் கட்டுவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ்., தலைமையிலான அதிகாரிகள் குழு இன்னும் சில நாட்களில் எஸ்டேட்டுக்குள் நுழைகின்றனர். கோத்தகரியில் கிளம்பும் அரசியல் சூடு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பும் . நீலகிரி மாவட்டம் கோத்தகரியில் உள்ள சசிகலா, ஜெ., ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் தற்போது பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது.

ஏற்கனவே வேலி அமைத்த விவகாரத்தினால் சில கிராம மக்கள் கடும் எதிர்ப்பை கிளப்பி மோதலில் போய் முடிந்தது. மேலும் ஜெயலலிதா செல்லும் பாதையில் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் செக்போஸ்ட் அமைத்துள்ள பிரச்னையும் இன்னும் முடியவில்லை. ஓய்வுக்காக ஜெ., தற்போது எஸ்டேட்டில் தங்கி இருக்கிறார் என்பதால் கூடுதல் பரபரப்பு. கோவை செம்மொழி மாநாட்டில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம் கொடநாடு எஸ்டேட்டில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் விதிமுறை மீறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை  : இதனையடுத்து ஒரிரு நாளில் இது தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் சிறப்பு குழுவையும் அமைத்து உத்தரவிடப்பட்டது. இவர் இன்று (சனிக்கிழமை ) ஊட்டி வந்தார். இவர் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குப்புச்சாமி , மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று கொட நாடு எஸ்டேட்டுக்குள் சென்று ஆய்வு நடத்த வேண்டுமெனில் அதிகாரிகள் தரப்பில் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் . ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. எஸ்டேட் அனுமதி இல்லாமல் அலுவலர்கள் நுழையும் பட்சத்தில் , எஸ்டேட் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் . இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கோத்தகிரியில் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை நிருபர்கள், புகைப்படக்காரர்கள் அங்கு குவிந்திருக்கின்றனர்.

ரகசிய கூட்டம் இடமாற்றம் : ஊட்டி தமிழ்நாடு இல்லத்தில் நடந்த கூட்டம் லீக்கானதும், கூட்டத்தை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீலகிரி வடக்கு வனக்கோட்ட அலுவலக ஓய்வு விடுதியில் தற்போது கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாவட்ட கலெக்டர் அர்ச்னா பட்நாயக் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்குள்ள ஆலை கட்டடம் 141 ஆண்டுகள் பழமையானது என்பதால் புனரமைப்பு பணி மட்டும் அதுவும் அனுமதி பெற்று செய்யப்படுவதாக எஸ்டேட் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் ( தி.மு.க.,) அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்.

2 பெரும் பங்களாக்கள் : இந்த எஸ்டேட் 900 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் டீ தூள் பேக்டரி, 2 பெரும் பங்களாக்கள், அழகான ஏரி, படகுகள் என உண்டு. 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

மாவட்ட ‌கலெக்டர் பத்திரிகை செய்தி வெளியீடு : இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் சார்ப்பில் பத்திரிகை நிருபர்களிடம் ஒரு செய்தி குறிப்பு வழங்கப்பட்டது, இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:  கொடநாடு எஸ்டேட்டில் விதிக்கு புறம்பாக தேயிலை தொழிற்சாலையில் கூடுதல் கட்டடம் கட்டுவது குறித்த உண்மை அறியும் உதயச்சந்திரன் ( இயக்குநர் , ஊராட்சி வளர்ச்சி ) தலைமையிலான ஒரு நபர் குழு முதற்கட்ட விசாரணை‌யை துவக்கியுள்ளது. ஊரகவளர்ச்சி, வருவாய்துறை, நகரபராமரிப்பு, மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்றும் ( சனிக்கிழமை) இந்த விசாரணை நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனி அலுவலர் உதயச்சந்திரன் பேட்டி: இன்று நடந்த ஆலோசனை குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது: 2 நாள் விசாரணை நடத்தியிருக்கிறேன். வருவாய், வேளாண், வன, பொறியியல் துறை அலுவலர்களிடம் நடத்திய விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் கள ஆய்வு ( எஸ்டேட் நுழைவு ) , உரிய நேரத்தில் செய்யப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: