வியாழன், 1 ஜூலை, 2010

எங்களிடம் 15 சதவீத வாக்கு வங்கி உள்ளது என்று ் திருமாவளவன்

மதுரை: 2011-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத ஒரு அரசியல் கட்சியாக உருவாகும். எங்களிடம் 15 சதவீத வாக்கு வங்கி உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதை மனதில் வைத்து ஒவ்வொரு கட்சியும் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தங்களிடம் 15 சதவீத வாக்கு வங்கி உள்ளதாகவும்,வரும் தேர்தலில் தங்களது கட்சி பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசுகையில்,

சட்டப்பேரவை தேர்தலை தனித்து நின்று சந்திக்கும் அளவிற்கு பொருளாதார வசதி எங்களிடம் இல்லை. 2011-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத ஒரு அரசியல் கட்சியாக உருவாகும்.

வரும் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றில் மட்டுமின்றி தமிழக வரலாற்றிலும் திருப்புமுனை ஏற்படப் போகிறது. தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 15 சதவிகித வாக்கு வங்கி உள்ளது.

கடவுளிடம் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார் விஜயகாந்த். தற்போது அந்த கடவுளை திமுகவிலும், அதிமுகவிலும் தேடிக் கொண்டிருக்கிறார் என்றார் திருமாவளவன்.

பதிவு செய்தவர்: எஸ் வி சேகர்
பதிவு செய்தது: 01 Jul 2010 6:21 pm
எங்க கிட்ட 30% வோட்டு இருக்கு.

பதிவு செய்தவர்: DMDK
பதிவு செய்தது: 01 Jul 2010 6:18 pm
விஜயகாந்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு தனித்து நிக்க துணிவு இருக்கா உன்னிடம், கேப்டன் எல்லாத்திலயும் கேப்டன்தான், நீயெல்லாம் விஜயகாந்தை பற்றி கருத்து சொல்லாதை .........

கருத்துகள் இல்லை: