திங்கள், 28 ஜூன், 2010

சிவத்தம்பிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு!..

செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் நாடு சென்றிருக்கும்
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களை நேற்றைய தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் யூலை முதலாம் திகதி தமிழ் கட்சிகள் யாவும் மறுபடியும் கலந்து பேசும் அரசியல் சந்திப்பு நிகழ இருப்பதாகவும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான கலந்து பேசி தீர்மானிக்கும் அரசியல் தளத்தை பலப்படுத்தும் இலட்சிய பணிக்கு வழிகாட்டியாக செயற்பட வேண்டும் என்றும் பேராசிரியர் அவர்களிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களிடம் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எல்லோருக்கும் பொதுவான உங்களது வருகையினையும் இந்த முயற்சிகளுடனான ஈடுபாட்டையும் அனைத்து தமிழ் கட்சியினரும் நிச்சயம் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள் என்றும் உங்களைத் தொடர்ந்து ஏனைய சமூக அக்கறை கொண்ட புத்திஐPவிகளும் இந்தப் பணியில் ஈடுபட முன்வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு புத்திஐPவிகள் மட்டுமன்றி  சமூக அக்கறையாளர்கள் கவ்வி சமூகத்தினர் இடதுசாரி சிந்தனையாளர்கள் மதத்தலைவர்கள் கலை இலக்கிய படைப்பாளிகள் ஊடகவியலாளர்கள் என சமூகத்தின் சகல தரப்பினர் முன்னிலையிலும் தமிழ் கட்சிகள் கலந்து பேசி தீர்மானிக்கும் அரசியல் சந்திப்புகள் நிகழ வேண்டும் என்பதும் தனது விருப்பம் என்றும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடான உரையாடலின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர். கா.சிவத்தம்பி அவர்கள் நாடு திரும்பியதும் இந்த அழைப்பை ஏற்று தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: