புதன், 30 ஜூன், 2010

ஆவேசம்: மத‌ குரு‌க்களை செரு‌ப்பா‌ல் அடி‌த்த பெ‌ண்க‌ள்




உ‌த்தர ‌பிரதேச‌த்‌தி‌‌ல் ல‌‌க்னோ நக‌ரி‌ல் வ‌சி‌க்கு‌ம் நா‌‌ஸ் எ‌ன்ற பெ‌ண்‌‌ணி‌ற்கு மத‌ குரு‌க்க‌ள் ‌விவாகர‌த்து வழ‌‌ங்‌கினார்கள்.
தன்னை கல‌ந்து ஆலோ‌சி‌க்காம‌ல் சுயமாகவே ‌விவாகர‌த்து வழ‌‌ங்‌‌கி‌யிரு‌‌ப்பதாக கூ‌றி நாஸ் ஆத்திரமடைந்தார்.அவர் தனது சகோத‌‌ரி‌யுட‌ன் மத‌க்குரு‌க்களை  செரு‌ப்பா‌ல் அடி‌த்து உதை‌த்தா‌ர்.
இது குறித்து நாஸ்,  ‘’கணவ‌ர் ‌வீ‌ட்டாரு‌க்கு ஆதரவாக மத‌க்குரு‌க்க‌ள் செய‌ல்படுகிறார்கள். மத‌க்குரு‌க்களை அடி‌த்து உதை‌த்ததா‌ல் எனது மனபார‌ம் குறை‌ந்தது.
‌திருமண‌ம் முடி‌ந்து 5 ஆ‌ண்டுக‌ள் ஆன பிறகு‌ம் கூடுத‌ல் வரத‌ட்சணை கே‌ட்டு‌க் கணவ‌ர் ‌‌வீ‌ட்டா‌ர் மன‌ரீ‌தியாக து‌ன்புறு‌த்‌தினார்கள்.
 மத குரு‌க்க‌ளிட‌ம் ல‌ஞ்ச‌ம் கொடு‌த்து‌வி‌ட்டு ‌விவாகர‌த்து பெ‌ற்று ‌வி‌ட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இ‌ந்த கு‌ற்ற‌ச்சா‌ற்றை மறு‌த்‌து‌ள்ள மத குருமா‌ர்க‌ள், இது கு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்து வரு‌வதாக கூ‌றியு‌ள்ளன‌ர்.

கருத்துகள் இல்லை: