இருவரும் தத்தமது ஸ்டைலில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் திரை விருந்துகள் இன்னும் ரசிகர்களுக்கும் அலுப்புத் தட்டவில்லை. அவர்களுக்கும் சலிப்பு வரவில்லை.
இந்த நிலையில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க கடும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. சில காலமாகவே இந்த முயற்சிகள் தீவிரமாகவே உள்ளன. கே.பாலச்சந்தர் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
பாரதிராஜா இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள். அதற்கு இளையராஜா இசையமைப்பார் என்றும் கூட பேச்சு வந்தது. வைரமுத்துதான் இப்படத்துக்கு பாடல்கள் எழுதப் போகிறார் என்று கூட கூறப்பட்டது. அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் மீண்டும் ரஜினி, கமலை வைத்து ஒரு புதிய பேச்சு கிளம்பியுள்ளது. சிவாஜி
சிவாஜி குடும்பத்தின் செல்லப் பிள்ளைகளாக உள்ளவர்கள் ரஜினியும், கமலும். எனவே சிவாஜி பிலிம்ஸுக்காக அவர்கள் நடிப்பார்கள் என்ற செய்தி
இருப்பினும் இதுகுறித்து சிவாஜி பிலிம்ஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆமோதிப்பும், மறுப்பும் வெளியிடப்படவில்லை.
எனவே இது உண்மையா அல்லது மேலும் ஒரு வதந்தியா என்பது நாளடைவில் தெரிய வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக