வியாழன், 1 ஜூலை, 2010

சிவாஜிலிங்கம்,தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனியொரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனியொரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று மதியம் தேர்தல் ஆணையாளரிடம் அதன் உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தனும், கட்சியின் செயலாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் திணைக்களம் புதிதாக பதிவு செய்கின்ற கட்சிகளை ஜீன் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜீன் மாதம் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விண்ணப்பங்களை கோறியிருந்தது. இதன் அடிப்படையில் நேற்று தேர்தல் திணைக்களத்தில் 65க்கும் மேற்றபட்ட விண்ணப்படிவங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: