சனி, 3 ஜூலை, 2010

தமிழரசுக்கட்சிக்கு துரோகம் ,நிர்வாகச் செயலாளர் குலநாயகம்

தமிழரசுக்கட்சிக்கு துரோகம் இழைப்போர் பதவிகளிலிருந்து உடனடியாக விலக வேண்டும் - நிர்வாகச் செயலாளர் குலநாயகம் வலியுறுத்தல
இலங்கைத் தமிழரசுக் கட்சி ,அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கி வரலாமேயன்றி தனி ஒரு அரசியல் கட் சியாகப் பதிவு செய்வதில் இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு போதும் பங்கு வகிக்க முடியாது. தமிழரசுக் கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளரும் தம் நலன்கருதி ஏதேச்சையாக நடந்து கொள்வதை கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு, ஏற்கனவே தமிழ்க் கட்சிகளின் கூட்டணியான தமிழர் விடுதலைக் கூட்டணியில் மற்றவர்களைப் பலிக்கடாவாக்கி விட்டு பிரச்சினைக்கு பரிகாரம் காண வக்கற்றவர்கள் இப்போது தம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள்.தமிழர் விடுதலைக் கூட்டணியில் தமிழரசுக் கட்சி தன் அடையாளத்தை தொடர்ந்து வைத்திருந்தது.இதனால் கூட்டணியில் பெரும்பான்மை ஆதரவை வைத்திருந்தும் கூட்டங்களைக் கூட்டி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது போனதினால் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்காலிகச் செயலாளர் நாயகத்தோடு இன்று இயங்குகிறது.
இந்தவகையில் திருவாளர்கள் இரா.சம்பந் தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகி யோர் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பெரும் துரோ கம் விளைவித்துள்ளார்கள். கட்சியின் அனுமதியின்றி இவ்வாறு செயற்படுபவர்கள் தாம் வகிக் கும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகவேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனி அர சியல் கட்சியாகப் பதியப்பட்டதன் மூலம் இலங்கை தமிழரசுக் கட்சி அழிந்து போய்விடும் என பி.பி.சி தமிழோசைக்குப் பேட்டியளித்த புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தெளிவாகவே கூறியுள்ளார்.
இதனை எந்த தமிழரசுக் கட்சிக்காரனும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அனைத்துத் தமிழ் பேசும் இனத்தையும் இணைத்து தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்டு வந்த தமிழரசுக் கட்சியின் அழிவை தமிழ் பேசும் இனம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வேறு கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டார்கள் என்ற காரணத்தால் அவர்கள் வகித்த பதவிகளிலிருந்து நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னொரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்துகொண்ட திருவாளர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, பொ.செல்வராசா ஆகிய நாடாளுமன்ற உறுப் பினர்களும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.
ஏற்கனவே இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இரு பிரிவுகள் பிரிந்து செயற்படுகின்றன. தமிழ்க் காங்கிரஸ் முற்றாகவே கூட்டமைப்பிலில்லை. அ.விநாயகமூர்த்தி தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தனிப்பட்ட மனிதராகவுள்ளார் மீதமாவுள்ளது ஈ.பி.ஆர். எல்.எவ்., ரெலோ மட்டுமே.
திருவாளர்கள் சம்பந்தன், சேனாதிராசா ஆகியோர் தாம் மட்டும் நினைப்பதை கொழும்பில் செய்துவிட்டு வடக்குக்கிழக்கிற்கு வந்து கட்சியினர் மீது எதையும் திணித்து விடலாமென நினைக்கின்றனர். புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தமிழோசைக்குப் பேட்டி அளித்தது போன்றல்லாமல் தமிழரசுக் கட்சி அழிந்து விடும் என்ற நிலைப்பாட்டால் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப் புக்காணப்படுகிறது. எனவே திருவாளர்கள் சம்பந்தன், சேனாதிராசா, செல்வராசா ஆகியோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தாம் வகிக்கும் பதவியிலிருந்து உடன் விலகி கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளத

கருத்துகள் இல்லை: