செவ்வாய், 29 ஜூன், 2010

'வா குவார்ட்டர் கட்டிங்'-வாங்கினார் தயாநிதி அழகிரி

சிவா, லேகா வாஷிங்டன் நடித்த 'வா குவார்ட்டர் கட்டிங்' படத்தை வாங்கியுள்ளார் தயாநிதி அழகிரி.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்த படம்தான் வா. இப்படத்துக்கு முதலில் 1/4 கட்டிங் என பெயரிட்டிருந்தனர். தற்போது இதை வா என்று மாற்றி விட்டனர். இப்படத்தில் சிவா, எஸ்.பி.பி.சரண், லேகா வாஷிங்டன் ஆகியோர் நடித்துள்ளனர். புஷ்கர், காயத்ரி தம்பதி இயக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா கேமராவை கவனித்துள்ளார்.

இப்படத்தை தயாநிதி அழகிரி வாங்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாகும். இதற்கு முன்பு தயாநிதி அழகிரி வெளியிட் தமிழ்ப் படமும் முழுக் காமடிப் படம் என்பது நினைவிருக்கலாம்.

ஓரம்போ படத்தை இயக்கியவர்கள்தான் காயத்ரியும், புஷ்கரும். தற்போது முழுக் காமெடிக் கதையுடன் வா மூலம் திரும்ப வந்துள்ளனர்.

படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை: