வியாழன், 1 ஜூலை, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அபாண்டமான குற்றச்சாட்டு குறித்து மான நஷ்ட்டஈடு கோரவுள்ளேன்- விஜயகலா மகேஸ்வரன்!

யாழ்ப்பாணத்தில், நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலையை, சிங்களக் காடையர்களைக் கொழும்பில் இருந்து கூட்டிச்சென்று விஜயகலா மகேஸ்வரனே இடிப்பித்தார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொய் பிரச்சாரம் செய்துவருகிறார்.

வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் வழங்கி அவர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அந்தப் பேட்டி யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெளிநாட்டுத் தொலைக்காட்சியிலிருந்து மறு ஒளிபரப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
அவர் என் மீதான இந்த அபாண்டமான பழியை வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் மீது நூறு மில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளேன் என்பதனை இந்தச் சபையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் விஜயகலா.

கருத்துகள் இல்லை: