புதன், 30 ஜூன், 2010

உள்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார். 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் கட்டுக்களுடன் நாகலாந்து உள்துறை

500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் கட்டுக்களுடன் நாகலாந்து உள்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார். நாகாலந்து உள்துறை அமைச்சர் இம்காங் எல் இம்சன். இவர் யார் என்று தன்னை நிரூபிக்க முடியவில்லை . நேபாள நாட்டுக்கு சென்று இந்தியா திரும்பும் போது இவர் போலீசில் சிக்கியுள்ளார். நாகலாந்து உள்துறை அமைச்சர் நேபாள திரிபுவன் விமான நிலையத்தில் வழக்கமான சோதனைக்குட்படுத்தப்பட்டார். அப்போது அவரது சூட்கேசில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் கொண்ட கட்டுக்கள் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் நேபாளத்தில் இந்திய கரன்சி 500 , ஆயிரம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 10 லட்சம் வரை இருந்ததாக தெரிகிறது.
 
இதனையடுத்து இவரிடம் போலீசார் விசாரித்தபோது தன்னை யார் என்று நேபாள போலீசாருக்கு புரிய வைக்கமுடியவில்லை. மேலும் இவர் அமைச்சர் என்று நிரூபிக்கும் ஆவணமும் இவரிடம் இல்லையாம். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கைது விவகாரம் குறித்து நாகலாந்து தலைமை செயலர் லாத்தாரா கூறுகையில்; அமைச்சர் கொண்டு சென்றது அவரது சொந்த பணம், அங்கு பணம் கொண்டு செல்வதில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் போயிருக்கலாம் என்றார்.

கருத்துகள் இல்லை: