வியாழன், 1 ஜூலை, 2010

திருவண்ணாமலை, பட்டம்மாள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்

திருவண்ணாமலை பவழக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் பட்டம்மாள். இவருக்கு வயது 60. சுதந்திர போராட்ட தியாகியான காந்திமதி ராஜனின் மனைவி ஆவார். 30 ஆண்டுகளுக்கு முன் காந்திமதி ராஜன் இறந்து போனார். இவர்களுக்கு குழந்தை கிடையாது. அரசு நிதி உதவியை பெற்றுக்கொண்டு பட்டம்மாள் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தினமும் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று, கோயில் வளாகத்தில் உள்ள பூந்தோட்டத்தில் பூக்களை பரித்து சாமிக்கு சாத்துவது பட்டமாளுக்கு வழக்கம்.

அதேபோல் இன்று (01.07.2010) காலை 6.30 மணி அளவில் பூப்ரிக்க கோயில் பூந்தோட்டத்திற்கு சென்றார். எப்போதும் 8 மணிக்கு வீடு திரும்பும் பட்டம்மாள், இன்று காலை 11 மணி ஆகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரைத் தேடி கோயில் பூந்தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு உள்ள பூச்செடியின் கீழ் பட்டம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எஸ்.பி. பாண்டியன் தலைமையிலான போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்துள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் பார்வையிட்டார். இறந்த பட்டம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பட்டம்மாள் அணிந்திருந்த 20 பவுன் நகைக்காக, மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதே கோணத்தில்தான் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வரும் பூஜைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறியதாவது, கொலை நடந்துள்ளதால் பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், தினசரி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: