சனி, 3 ஜூலை, 2010

மலேசிய30 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியை சாமிவேலுவிலக கோரிக்கை வலுக்கிறது

கோலாலம்பூர்:மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து டத்தோ சாமிவேலு விலகும்படி, அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.மலேசியாவின் ஆளும் கூட்டணியில் மலேசிய இந்தியன் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியின் தலைவராக டத்தோ சாமிவேலு உள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் இந்த கட்சி, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இக்கட்சி போட்டியிட்ட ஒன்பது இடங்களில் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் தலைவரான சாமிவேலுவும் எம்.பி., தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, இந்த கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது குறித்து இந்த கட்சியின் அதிருப்தி தலைவர் கே.பி.சாமி குறிப்பிடுகையில், "கடந்த 30 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியை சாமிவேலு வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அவர் இந்திய வம்சாவளியினர் முன்னேற்றத்துக்கு எதையும் செய்யவில்லை. சாமிவேலு பதவி விலகக்கோரி நாளை அமைதிப் போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு மற்றும் இளைஞர் பிரிவு கூட்டத்துக்கு டத்தோ சாமிவேலு நாளை ஏற்பாடு செய்துள்ளார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சித் தலைவர் பதவியை தனக்கு அடுத்தபடியாக உள்ள பழனிவேலுவிடம் ஒப்படைப்பதாக, 73 வயதான டத்தோ சாமிவேலு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: