திங்கள், 28 ஜூன், 2010

மாவை , அரசின் சதி முயற்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை தாம் பார்ப்பதாகவும

comments B4news 
டக்ளசின் ஒற்றுமைக்குரல் இவருக்கு சதி முயற்சியாக தெரிகிறது. வெள்ளைக்கொடியோடு போனவர்களின் வியாதி இது. எங்கே ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் தனது முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ இன்று ஐவரும் பயப்படுவது நன்றாகவே புரிகிறது.
தமிழ் மக்களின் ஒற்றுமை மாவைக்கு துர்சொப்பனமாக தெரிகிறது

 Main news
ஒரு புறத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டு மறுபுறுத்தில் பொது இணக்கப்பாட்டிற்கு வருமாறு அழைப்பது சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான அரசின் சதி முயற்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை தாம் பார்ப்பதாகவும் த.தே.கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்துடனும் வெளிநாட்டு இராசதந்திரிகளுடனும் தாம் பேசி வருவதாகவும் இந்த பேச்சுக்களை குழப்பும் நோக்கத்துடன் தான் ஈ.பி.டி.பி தலைமையிலான இந்த ஏழு கட்சிகளும் கூட்டு அமைந்திருக்கின்றதோ என்ற சந்தேகமும் தமக்கு இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் இந்த தமிழ் குழுக்கள் இன்னமும் கடத்தல்கள் கப்பம் பெறுதல்களை நிறுத்தாத நிலையில் அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரமுடியாது என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இந்த தமிழ் கட்;சிகளின் சந்திப்பு என்பது தமிழ் மக்களை பலவீனப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: