திங்கள், 28 ஜூன், 2010

மெட்ரோ ரயில்,சென்னை நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வடபழனி, கோயம்பேடு, ஆலந்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் ரயில் நிலையங்களை கட்டுவதற்காக சுமார் 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்த புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு மெட்ரோ ரயில் திட்டதை செயல்படுத்த உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் கோயம்பேடு, வடப்பழனி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களை கட்டும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. இதில் சுமார் 11 ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர். இதில் கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர் அல்லது கே.கே.நகர் ரயில் நிலையங்களை வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்றிக்கு, 139 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், ராணுவ அலுவலர் பயிற்சி மையம், சிட்கோ ஆகிய 5 ரயில் நிலையங்களை கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியும், மேற்கண்ட நிறுவனத்துக்கு 94 கோடியே 99 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: