புதன், 30 ஜூன், 2010

சல்மன்கான் ,படப்பிடிப்புக்கள் இலங்கையில, தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த


ரெடி" திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கள்  இலங்கையில்  நடத்தப்படுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த தான் கவலையடையப் போவதில்லை என்று இந்திய பொலிவூட் நடிகர் சல்மன்கான் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தான் இதுவரையில் எதுவித பிரச்சினைகளையும் எதிர்நோக்கவில்லை என்று கூறிய சல்மன்கான், குறித்த திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிடுவதிலும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என்றும் சொன்னார்.

"ரெடி" திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள சல்மன்கான் உள்ளிட்ட குழுவினர் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மொரீசியஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ள போதிலும் பெரும்பாளான காட்சிகள் இலங்கையிலேயே பதிவு செய்யப்படவுள்ளன என்றும் சல்மன்கான் மேலும் குறிப்பிட்டார்.

பொலிவூட் நடிகர் சல்மன்கான் கதாநாயகனாக நடிக்கும், "ரெடி" திரைப்படத்தின் படப்பிடிப்புக்களுக்காக தென்னிந்திய நடிகை, அசினும் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: