திங்கள், 28 ஜூன், 2010

நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

மரத்துப்பட்டி: "நீயா' சினிமா பட பாணியில்  காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட  காதலனை  அடித்து கொன்ற சிறுவனை  இரண்டு நாள் கழித்து தேடி  வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் எடுத்து  ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் வாழை தோப்பில் கடந்த 26ந்தேதி மாலை 3 மணிக்கு இரண்டு பாம்புகள் புனையல் போட்டு காதல் சல்லாபத்தில் ஈடுபட்டன.

ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து  ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை  பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட  சில சிறுவர்கள்  ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த   நல்ல பாம்பு  இடையூர் செய்தவர்களை  பார்த்து  சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான  நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.

கருத்துகள் இல்லை: