செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழகம் முதலிடத்தில்,இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில்

வெளிநாட்டு பயணிகள் வருகை: தமிழகம் முதலிடம்
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.
 
கடந்த ஆண்டில் மட்டும் 20.37 லட்சம் சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தின் பழமை மற்றும் கலாசார நினைவு சின்னங்களைக் காண வெளிநாட்டினர் அதிகமானோர் வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 20.37 லட்சம் பேர் வந்துள்ளனர். இது இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகளில் 17.3 சதவீதம் ஆகும்.

மகாபலிபுரத்தில் உள்ள பல்லவர் கால நினைவு சின்னங்களை காண சுற்றுலா பயணிகள் அதிகமானோர் செல்கின்றனர். மேலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இங்கு 2009ல் 11.58 கோடி பேர் வந்துள்ளனர். இது மொத்த உள்நாட்டு பயணிகளில் 17.8 சதவீதம் ஆகும்.

உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதில் ஆந்திரா தொடர்ந்து 4வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது. இங்கு 2009ல் 15.75 கோடி பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் திருப்பதியில் உள்ள திருமலை கோயில், சார்மினார் மற்றும் கோல்கொண்டா போன்ற பகுதிகளை காண அதிகமானோர் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமானோரை 2009ல் கவர்ந்த 10 மாநிலங்கள் வரிசை பட்டியலில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை: