வெள்ளி, 2 ஜூலை, 2010

இன்று கொழும்பில் நடைபெற்ற சகல தமிழ் கட்சிகளின் கூட்டத்திற்கு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில், இன்று கொழும்பில் நடைபெற்ற சகல தமிழ் கட்சிகளின் கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் பங்குபற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்றைய கூட்டத்தில், அரசியல் அமைப்பு சீர்திருத்தம், மற்றும் தமிழ் மக்களின் நாளாந்த நிகழ்வுகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க தமிழ் கட்சிகள் உப குழுவொன்றை அமைத்துள்ளன.
இந்த குழுவில் இன்று பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகளில் தலா ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், இன்றைய கூட்டத்தில்
1.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,
2. தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகம்,
3. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,
4. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதராஜப்பெருமாள் அணி,
5. ஜனநாயக மக்கள் முன்னணி,
6. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு 
7. தமிழர் விடுதலைக் கூட்டணி

ஆகிய ஏழு கட்சிகள் கலந்து கொண்டன.
இதன் போது அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடப்படவில்லை என கூறப்படுகிறது.
இக்கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதும், அவர்கள் சரியான பதிலை வழங்கவில்லை. அத்துடன் இந்த கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கவில்லை.
இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் கூட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கலாம் என்ற நம்பிக்கை இந்த கட்சிகளுக்கு மத்தியில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த கட்சிகள் எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கூடையில் அடைக்கப்பட்ட நண்டுக்கூட்டத்தின் கதையை அம்புலிமாமா வாங்கி படியுங்கள்.
பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்று சேராது என்று இரண்டு தசாப்த்தங்களை தனது சுயநல வீராப்புக்காக  வீணடித்த தந்தை செல்வநாயகத்தின் வழி வந்தத தமிழ் தேசிய கூட்டமைப்பினர். போதாக்குறைக்கு அந்த செல்வனயக்கதின் அதேபாணியை இன்னும் சற்று பயங்கரவாத சுயநலத்தையும் சேர்த்து மக்களையும் இதர போராளிகளையும் கொன்று குவித்த புலிப்பானிகல்தானே இவர்கள். ஒற்றுமை பார்த்து வெறுத்திடும் தமிழ் தலைவர்களே இன்னுமா பாடம் படிக்கவில்லை?

கருத்துகள் இல்லை: