புதன், 25 செப்டம்பர், 2019

PMC.வங்கிக்கு நெருக்கடி! .. இந்திய வங்கி துறை குரங்கின் கையில் பூமாலை ?

Karthikeyan Fastura : பஞ்சாப் மகாராஷ்டிரா கோவாப் என்ற PMC வங்கிக்கு RBI முக்கிய வேலை
நிறைய தடைகள் விதித்துள்ளது. அது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஆறு மாதத்திற்கு யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. வங்கி டெபாசிட்டில் இருந்து யாரையும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க அனுமதிக்க கூடாது, புதிதாக கடன் வாங்கவும் கூடாது, வங்கி டெபாசிட் வாங்கவும் அனுமதி இல்லை, வேறு எதிலும் முதலீடும் செய்யக்கூடாது என்று கிட்டத்தட்ட வங்கியின் எல்லா நடவடிக்கைகளையும் முடக்கி போட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் கடன்களை வசூலிப்பது தான்
வங்கியின் போர்டு கலைக்கப்பட்டு RBIஆல் நியமிக்கப்பட்ட தலைமை வங்கியை மேலாண்மை செய்யும்.
ஆனால் வங்கிக்கு சொந்த மான சொத்துக்களும், டெபாசிட்டும் தாக்குபிடிக்கும் அளவில் இருக்கையில் ஏனிந்த திடீர் நடவடிக்கை என்று வங்கி ஊழியர்களும் கூட குழம்பிப் போயுள்ளார்கள்.
காரணம் Irregularities என்று சொல்கிறார்கள். ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஊழல் நடந்திருக்கிறது என்றால் யார் காரணம் என்றும் தகவல் இல்லை.

அமெரிக்காவில் மோடிக்கு கடும் எதிர்ப்பு .. போராட்ட களமாக மாறிய ஹூஸ்டன் நகரம்.. வீடியோ


Protest outside Howdy Modi Event in Houston tamil.oneindia.com - mathivanan-maran : ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹுஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். 50,000 இந்தியர்கள் பங்கேற்ற இந்த பிரமாண்ட நிகழ்வில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்டார்.
பெரும் ஆரவாரங்களுக்கு இடையே மோடியும் டிரம்ப்பும் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அரங்கத்துக்கு வெளியே பல்வேறு அமைப்பினர் மோடிக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர்.

கேரளா முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு


மாலைமலர் : கேரளா சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழுவினர், நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை இன்று மதியம் சந்தித்தனர்.
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக இரு மாநிலங்களும் பேசி வருகின்றன. கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, பரம்பி குளம்-ஆழியாறு, ஆனை மலையாறு, பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது ஆகிய பிரச்சினைகளும் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ளன. அத்துடன், குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விடுவது உள்பட நதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கிறது.

PMC Bank திவால்? வங்கி கணக்குகளில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியுமாம்.. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (Punjab and Maharashtra Cooperative Bank

டெபாசிட் செய்தவர்கள் ஆர்பிஐ அறிக்கை tamil.goodreturns.in - gowthaman : தலைப்பில் படித்தது சரி தான் இனி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியுமாம்.
இந்த சட்டம் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (Punjab and Maharashtra Cooperative Bank)சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு போல அனைத்து வகையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்துமாம்.
இந்த தடை அடுத்த ஆறு மாத காலங்களுக்கு நீடிக்கும் எனவும் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. ஆர்பிஐ என்ன சொல்லி இருக்கிறார்கள் விரிவாகப் பார்த்துவிடுவோமே..!
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank)இனி எக்காரணத்தை முன்னிட்டும் புதிதாக கடன்களைக் கொடுக்கவோ, கடன்களை ரெனீவ் செய்யவோ, புதிதாக முதலீடுகளைச் செய்யவோ, புதிதாக கடன் வாங்கவோ, புதிதாக டெபாசிட்களை வாங்கவோ, தன் சொத்துக்களை விற்கவோ கூடாது. இப்படி எதையாவது செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐயிடம் இருந்து எழுத்துப் பூர்வமான ஒப்புதல் வாங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாத காலத்துக்கு இருக்குமாம்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி - அதிமுக வேட்பாளர்கள் - முத்தமிழ்ச்செல்வன் -ரெட்டியார்பட்டி வெ. நாராயணன்

ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமிவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்புமாலைமலர் : விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

மாணவர் உதித் சூர்யா கைது! நீட் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டுக்கு ஆளானவர்

நீட் ஆள்மாறாட்ட புகார்- மாணவர் உதித் சூர்யா கைதுமாலைமலர் : நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த மாணவர் உதித் சூர்யா திருப்பதி மலை அடிவாரத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை: சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா,
மும்பையில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, அதன்மூலம் கலந்தாய்வில் பங்கேற்று தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.  ஆனால், அவர் ஆள்மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்துள்ளதாக தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு இ-மெயிலில் புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து உதித் சூர்யாவை அழைத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.
விசாரணைக்குப் பிறகு மாணவர் உதித் சூர்யா கல்லூரிக்கு வரவில்லை. அதேசமயம் அவர் மீதான ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ரஜினி ரெடி.. மதுரையில் பிரமாண்டம்.. ஜனவரியில் கட்சி பெயர் அறிவிப்பு.. தடபுடல் மாநாடு.

tamil.oneindia.com - hemavandhana: சென்னை: மதுரையில் பிரமாண்ட மாநாட்டை கூட்டுகிறார்.. கட்சியை அங்கு வைத்துத் தொடங்குகிறார்.. அடுத்த ஆண்டு பொங்கல் "போக்கிரி ராஜா" பொங்கலாக மலர போகிறது.. இதுதான் ரஜினி ரசிகர்களிடையே நிலவும் இன்னொரு பரபரப்பு.
ரஜினி தரப்பில் திடீரென அரசியல் விவகாரங்கள் திடீர் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது. அரசியலுக்கு வரப் போறேன்னு சொல்லியே 2 வருடமாகி விட்டது. இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.
கட்சி ஆரம்பிப்பது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலாகவே பதிலளித்து வந்தார் ரஜினி. இந்த நிலையில் திடீரென பிரஷாந்த் கிஷோருடன் ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார்.
இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ரஜினி தரப்பில் என்ன கூறுகிறார்கள் என்றால்.. ரஜினி கட்சி தொடங்க தயாராகி விட்டார். எல்லாம் ரெடியான பின்னர் கட்சி தொடங்கவே அவர் விரும்பினார். அவர் விரும்பியபடி தற்போது கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. இதையடுத்து பிரஷாந்த் கிஷோருடனும் அவர் ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.

மோடியின் கோபம்…அமித்ஷாவின் திடீர் பல்டி… தி.மு.க.வுக்கு வெற்றியா?அதிர்ச்சி ரிப்போர்ட்!

bjp
dmkgovernornakkheeran.in - இரா. இளையசெல்வன் : அமித்ஷாவின் இந்தி பொது மொழி என்கிற கருத்து, பிரதமர் மோடியுடன் மோதலை உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள். தேசிய அளவில் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்தி திணிப்பு எதிர்ப்பில் எப்போதும் உறுதியாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை கடந்த 16-ந்தேதி அவசரமாக கூட்டிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  அமித்ஷாவின் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என அறிவித்தார்.

மாயாவதி முன்னாள் செயலரின் ரூ.230 கோடி பெறுமான பினாமி சொத்துக்கள் முடக்கம்

hindutamil.in : புதுடெல்லி, பிடிஐ : முன்னாள் உ.பி. முதல்வர் மாயாவதியின்
முன்னாள் செயலரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான நேத் ராம் என்பவரின் ரூ.230 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
டெல்லி, நொய்டா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள இவரது 19 அசையாச் சொத்துக்களை வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட பினாமி சொத்துக்களில் வர்த்தக மற்றும் குடியிருப்புச் சொத்துக்கள் அடங்கும்.

ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்.. வீடியோ ... உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’

Greta Thunberg`  விகடன் : உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ - ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க். காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ஐ.நா காலநிலை மாநாட்டில் பேசிய உரை உலகத் தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ளது. ஒரு சிறிய நாட்டிலிருந்து புறப்பட்டு அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டுக்குச் சென்று, அந்நாட்டு அதிபருக்கு எதிராகப் பெரிய மக்கள் படையைத் திரட்டி அவரை எதிர்த்து குரல் கொடுப்பதெல்லாம் ஒரு வரலாற்று நிகழ்வு. இதை தன் 16 வயதில் செய்துகாட்டியுள்ளார் காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். ஸ்வீடனில் தனி ஆளாகத் தன் போராட்டத்தைத் தொடங்கியவர், தற்போது அமெரிக்க அதிபரின் சொந்த ஊரில் நின்றுகொண்டு அவருக்கு எதிராக கர்ஜனை செய்யும் அளவுக்குப் புகழ்பெற்றுள்ளார். ’காலநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் ஆகியவற்றுக்கு எதிராக உலகத் தலைவர்கள் செயல்பட்டு திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்பதுதான் இவரின் பிரதான கோரிக்கை. இதை வலியுறுத்திப் பல நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

ஆளில்லா விமானத்தில் பாகிஸ்தான் ஆயுதங்களை வினியோகிக்கிறதா? காஷ்மீரில் ..

ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை வினியோகிக்கும் பாகிஸ்தான் - திடுக்கிடும் தகவல்கள் தினத்தந்தி :   சண்டிகார், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் அதிரடியாக நீக்கியது. அதுமட்டுமின்றி அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்தும், ஆயுதங்களை வினியோகித்தும் நாசவேலைகளை நடத்தி வந்த பாகிஸ்தானுக்கு இது பேரிடியாக அமைந்தது.
இனி இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக என்ன செய்வது என யோசித்த பாகிஸ்தான், அடுத்த கட்டத்துக்கு சென்று இருக்கிறது. ஆளில்லா விமானங்களை கொண்டு ஆயுதங்களை கடத்தலாம் என்ற முடிவுக்கு அந்த நாடு வந்து இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை .. சுப்பிரமணியம் சாமி மட்டுமல்லாது ஜெயலலிதாவும் கூட முன்பே அறிந்திருந்தார்?

வளன்பிச்சைவளன் : பதிவு - 139 ;
ஈழப்போரும் தமிழக ஈழத்தமிழர்களின் பொறுப்பும் கடமையும் : 
நிகழ்ச்சிகளை முன் கூட்டியே ரத்துசெய்தசுப்ரமண்யசாமி
ராஜீவ்கூட்டத்தை ரத்து செய்த ஜெயலலிதா.
ஜெயின் கமிஷனால் கொலைக்கு தொடர்பு உள்ளவர் என அடையாளம் காட்டப் பட்டவர்
 தேர்தல் பிரச்சார உச்ச கட்ட நேரம் மே 21 மதுரையில் பொதுக் கூட்டம் மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு சுப்பிரமணியன் சுவாமி விமான டிக்கெட் கூட முன் பதிவு செய்ய வில்லை அவருக்கு கொலைத்திட்டம் தெரிந்திருந்தது
மே 20 சேலத்தில் சுப்பிரமணியன் சுவாமி சேலம் ஆத்தூர் பொதுக் கூட்டம். கூட்டம் முடிந்த உடன் அவசர வேலை டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகள் கார் அச்சிறுப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது முன்னாள் எம் எல் ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல் காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம் சுவாமி அதைக் கூட பொருட்படுத்தாமல் சென்னைக்கு ஓடினார்
அப்போது அவர் மத்திய அமைச்சர் சென்னையில் "ட்ரைடன்ட்" ஓட்டலில் தங்கி இருந்தாக ஜெயின் கமிஷனில் சாட்சி சொல்லப் பட்டது.
சந்திராசாமி பிரபலமான அப்பலோ ஹாஸ்பிடல் குழுவினரின் "சிந்தூரி" யில் பதிவு எதுவும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார்.

மோடிக்கு விருது .. பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு அறிஞர்கள் எதிர்ப்பு!


INDIA PRIME MINISTER NARENDRA MODI USA BILLGATES AWARD மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் மோடிக்கு விருதா? பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு அறிஞர்கள்  எதிர்ப்பு!
nakkheeran.in - ஆதனூர் சோழன் : பில்கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிந்தா கேட்ஸ் ஆகியோர் பெயரில் ஒரு அறக்கட்டளை இயங்குகிறது. உலக அளவில் “அனைத்து உயிர்களும் சமம்” என்ற கோட்பாடுக்கு ஏற்ப பாடுபடுகிறவர்களுக்கு “குளோபல் கோல்கீப்பர் விருது” என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒரு விருதை இந்த அறக்கட்டளை வழங்குகிறது. இந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு இந்த விருதை வழங்க முடிவு செய்திருக்கிறது.
தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், இந்த முடிவை திரும்பப்பெறும்படி பில்கேட்ஸ் கேம்பிரிட்ஜ் அறிஞர்களும், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 70- க்கும் மேற்பட்டோர், கேட்ஸ் அறக்கட்டளைக்கு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

டொனால்ட் ட்ரம்ப்: `பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’

`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்Imran khan - Trump  விகடன் : காஷ்மீர் விவகாரத்தில், தான் மத்தியஸ்ம் செய்ய விரும்புவதாகக் கருத்து தெரிவித்தார், ட்ரம்ப். இதற்கு இம்ரான் கானும் விருப்பம் தெரிவிக்க, இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ஹெளடி மோடி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் தோன்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதற்கு அடுத்த நாளே பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஹெளடி மோடி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதம், மும்பை மற்றும் அமெரிக்கா 9/11 தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கடுமையான வாதங்களை முன்வைத்தாலும், பாகிஸ்தான் குறித்தோ காஷ்மீர் விவகாரம் குறித்தோ ட்ரம்ப் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.

சின்மயானந்தா மீது பாலியல் புகாரளித்த மாணவி கைது.. பாஜக சாமியார் வன்புணர்வது எல்லாம் ஒரு குத்தமாயா?


சின்மயானந்தா மீது பாலியல் புகாரளித்த மாணவி கைது!   மின்னம்பலம் :சாமியார் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்திருந்த சட்டக்கல்லூரி மாணவி பணம் பறித்த வழக்கில் இன்று (செப்டம்பர் 24) சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான சின்மயானந்தாவுக்கு சொந்தமான முமுக்‌சூ ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தால் நடத்தப்படும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துக் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த ஷாஜகான்பூர் கீழமை நீதிமன்றம் சின்மயானந்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம்?

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம்!மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு 3 ஆண்டுகளாக இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து, தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் :விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும், நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சக்தி வாய்ந்த நில நடுக்கம்..


பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - 5 பேர் பலி?தினத்தந்தி :பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது; இதன் தொடர்சியாக வட இந்தியாவிலும்  உணரப்பட்டு உள்ளது. . இஸ்லாமாபாத் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சாலைகள் பிளந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளன.  பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜராத், சித்ரால், மலாக்கண்ட், முல்தான், ஷாங்க்லா, பஜபூர், ஸ்வாட், சாஹிவால், ரஹீம் யர் கான்
 மிர்பூர் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மீர்பூர் மாவட்டத்தில் சாலைகள்  பலத்த சேதம் அடைந்தன.
இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் வரை உயிர் இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது . நூற்றுக்கும் அதிகமானபேர் காயம் அடைந்து உள்ளனர். > வட மாநிலங்களின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது. பஞ்சாப், ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

நாங்குநேரி, விக்கிரவாண்டி .. ஒரு தொகுதியை பாஜக கேட்கிறதாம் .. அதிமுக ஆலோசனை

தினகரன் : சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடந்து முடிந்தது. ஆனால் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை  அறிவிப்பதில் அதிமுகவில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜக ஒரு தொகுதியை கேட்பதால், இன்று சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு செய்யப்படுகிறது.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த  சனிக்கிழமை அறிவித்தார்.அதன்படி, இந்த இரண்டு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று (23ம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த ரூ. 25 கோடி: பதறவைத்த பிரமாணப் பத்திரம்

தினமணி :புது  தில்லி: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக திமுக ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் அரசியல் கட்சிகள் அதுதொடர்பான வரவு செலவு விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கணக்குகளை அரசியல் கட்சிகள் சமர்ப்பித்து வருகின்றன. 
அந்த பிரமாணப் பாத்திரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:< மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஜூலை 10 மற்றும் செப்டம்பர் 13 ஆகிய இரு தேதிகளில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்தல் செலவு தோராயமாக ரூ. 7.2 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.
அதேசமயம் திமுக தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 10 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடியும் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மொத்த செலவு ரூ. 70 கோடி என்றும், அதில் ரூ. 40 கோடி கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

ரமணாஸ் மெஸ் உரிமையாளர் 450 பசுக்களை வாங்கி கடனாளியாகி ஓடிவிட்டார் .. ஜோதிடர் கூறியதால்


tamiloneindia : துரையில் ஜோசியர் ஒருவரின் பேச்சை கேட்டு 450 பசுமாடுகளை வாங்கிய மெஸ் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். மதுரையில் பிரபல ஹோட்டல்களில் ஒன்று ரமணாஸ் மெஸ்.
இந்த மெஸ்ஸிற்கு 3 கிளைகள் உண்டு.
இதன் உரிமையாளர் செந்தில். இவருக்கு ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை இருந்ததாம். தனது தொழிலை மேலும் மேம்படுத்த மாடுகளை அதிக அளவில் வளர்த்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என ஜோதிடர், செந்திலிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய செந்தில் 450 மாடுகளை வாங்கி ஒரு பண்ணையே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மாட்டை பராமரிக்கவும் தீவனத்துக்காகவும் பெரும் கடனை பெற்றதாக கூறப்படுகிறது.
இதை சமாளிக்க கோபால் என்ற நபரிடம் 5 கோடியை செந்தில் கடனாக பெற்றுக் கொண்டார். மேலும் அந்த நபரை மெஸ்ஸில் பங்குதாரராகவும் சேர்த்து கொண்டாராம். இந்த நிலையில் கடனை அடைக்காத செந்தில், கோபாலிடம் வாங்கிய 5 கோடி பணத்தையும் சுருட்டி கொண்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டதாக கோபால் புகார் அளித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தன்னிடம் பணியாற்றி வந்த 120 ஊழியர்களின் தலா ரூ 2 லட்சம் வங்கியில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனையும் திருப்பிச் செலுத்தாமல் செந்தில் தலைமறைவாகிவிட்டதாக அந்த ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாயமாகியுள்ள செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர்

கீழடி என்பது வெறும் Tip of the iceberg தான்... சத்தத்தை குறைத்துவிட்டு இன்னும் ஆழமாக தோண்டுவோம்!.


Karthikeyan Fastura ; கீழடி என்பது வெறும் Tip of the iceberg தான். வைகை
தோன்றிய இடத்தில் இருந்து அது கலக்கும் இடம் வரைக்கும் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்கள் 200க்கும் அதிகம். அதில் கீழடி தொல்பொருள் ஆய்வுக்கு மிக மிக உகந்த இடமாக இருந்ததால் அங்கு முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
பசுமை நடை சார்பாக நடந்த கீழடியில் நிகழ்ந்த கூடுகையில் இருமுறை குடும்பத்துடன் பங்கேற்றிருக்கிறேன். அதன் பிறகு பசுமைநடையின் நூறாவது நடை பெருவிழாவே ஒரு தொல்லியல் திருவிழாவாக, ஆய்வு நிகழ்வாக தான் நடந்தது. அப்போது அமர்நாத் ராமகிருஷ்ணன், ஓடிஸா பாலு, ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் கலந்துகொண்டு மிக விரிவாக பேசினார்கள். அப்போதே அவர்கள் குறிப்பிட்டது தான் அங்கு எந்தவித மத சின்னங்களும் இல்லை என்று.
எழுத்தாளர் சமூகசெயல்பாட்டாளர் முத்துகிருஷ்ணன் இந்த நிகழ்வை எந்தவித பெரிய நிதி ஆதாரம் இன்றி மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நடத்தினார். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய, தமிழ் பல்கலைகழகம் செய்ய வேண்டிய, உலகத் தமிழ் சங்கம் செய்ய வேண்டிய ஒரு பெரும் நிகழ்வை ஒரு சிறு குழுவினர் உதவியுடன் பொது மக்களுக்கு
கொண்டு சேர்த்தார். எந்த கட்டணமும் இன்றி உணவு பரிமாறி இந்த நிகழ்வை செய்வதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். அன்று இதைப் பற்றி ஒரு டிவி நிகழ்ச்சியிலும் வந்த ஞாபகம் இல்லை.

பாப்பாத்தியாக எனக்கு ஏன் பெரியாரை பிடித்தது ?

upaudionetwork.wordpress.com : என்னுடைய சிறுவயது முதற்கொண்டு பெரியார்
என்றால் சூத்திரன்,பிராமண துவேஷி என்று மட்டுமே என் வீட்டு பெரியவர்கள் என்னிடம் கூறி நான் கேட்டுள்ளேன். அது சிறுவயதில் என்னுடைய மனதில் மிக நன்றாகவே பதிந்தது. அன்றுலிருந்தே என்னுடைய நண்பர்களிடம் பெரியாரை பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாக பேசியதே மிக அதிகம்.
பின் என்னுடைய கல்லூரி நாட்களில் எல்லாதவிதமான மாணவர்களுடனுமே நட்பு வைத்திருந்தே. அதில் ஒரு நண்பன் மூலம் பெரியாரை பற்றின சரியான புரிதலை கிடைக்கப்பெற்றேன். அன்று நான் முக்கியமாக புரிந்துகொண்ட விஷயம் பெரியாரின் மூலம் பிராமணப் பெண்கள் நிறையவே பலன் அடைந்துள்ளனர்.


பொதுவாக இந்த ஜாதி கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கத்தின் அழுத்ததின் காரணமாக பெண்கள் தங்களுடைய ஜாதி பெருமையை நிறைய பேசுவார்கள் . குறிப்பாக பாப்பாத்திகள் நிறையவே பேசுவார்கள். அப்படி தன்னுடைய ஜாதி பெருமையை பேசவில்லை என்றால் பிராமண ஆண்கள் தங்களை பிராமண பெண்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற பயமும் கூட இவர்கள் தங்களுடைய ஜாதி பெருமையை பேசுவதர்கான ஒரு முக்கியமான காரணம்.
அப்படி என்ன பெரியார் பார்ப்பன பெண்களுக்கு செய்துவிட்டார் ?
அந்த காலத்தில் மொட்டை பாப்பாத்தி என்ற கிண்டலான சொல்லாடல் இருந்தது, அது முக்கியமாக பார்ப்பன பெண்கள் தன்னுடைய கணவனை இழந்த பிறகு மொட்டை அடித்து காவி புடவையுடன் வீட்டின் ஓரமாக உக்கார வைத்து விடுவார்கள்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களிலும் திமுக ...வீடியோ .. அகில இந்திய தலைமையை ஏற்க தயாராகிறது?


காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களிலும் திமுக ஆரம்பிக்கும் முயற்சி செயல் முறைப்படுத்தப்பட்டால் அது ஒரு Master Stroke என்று வரலாறு கூறும்!
இதற்குரிய தார்மீக உரிமை Moral High Ground திமுகவுக்கு உண்டு!
இந்திய பெரு நிலப்பரப்பின் மண்ணின் மைந்தர்கள் பெரும்பாலும் திராவிடர்களே ..
முன்பொருமுறை காங்கிரசின் பழம்பெரும் தலைவர் பாபு ஜெகஜீவன் ராம் கூறியிருக்கிறார் . அவர் மட்டுமல்ல ஏராளமான அகில இந்திய தலைவர்கள் இந்த கருத்தை கூறியிருக்கிறார்கள்.
பார்ப்பனர்களும் பனியாக்களும் அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே இந்த கருத்தை ஏற்று கொள்ள மறுப்பார்கள். அவர்கள் தங்களின் ஆதிக்க சுரண்டலுக்கு இந்த கோட்பாடு தடைஎன்பதை அறிவார்கள்.
அவர்களின் அதி உச்ச பட்ச கொள்ளைதான் தற்போது நடைபெறுகிறது.
இந்திய தேசிய கட்சிகள் பெரும்பாலும் மண்ணின் மக்களை சுரண்டும் ஆதிக்கவாதிகளின் நிகழ்ச்சி நிரலைத்தான் இதுவரை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
இன்றைய காஷ்மீராகட்டும் இதர மேற்குவங்கம் அஸ்ஸாம் போன்ற மாநில மக்களின் அடிப்படை அடையாளங்களை இல்லாதொழிக்கும் அடவடியை ஆர் எஸ் எஸ் பாசிச சக்திகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்திய தேசிய அளவில் சரியான ஒரு எதிர்க்கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை திமுகவே தற்போது வெளிக்காட்டி உள்ளது.
இது ஒரு வரலாற்று தேவை.

இந்தி அலுவல் மொழி - திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே இந்தி விருது

இந்தி அலுவல் மொழி பயன்பாட்டை சிறப்பாக நடை முறைப்படுத்தியதற்காக திருச்சி கோட்டத்திற்கு, ரயில்வே விருது வழங்கப்பட்டுள்ளது
தந்தி டிவி : இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்தும் ரயில்வே கோட்டத்திற்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, திருச்சி கோட்டத்திற்கு இந்த விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது. 'ராஜபாஷா ரஜத் பதக்' என்ற வெள்ளி பதக்கத்தை, திருச்சி கூடுதல் கோட்ட மேலாளர் பெற்றுள்ளார். ரயில்வே துறையில் தொடர்ந்து இந்தி திணிப்பு, தமிழர்களுக்கான வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில் இந்த விருது கிடைத்திருப்பது, பரபரப்பை அதிகரித்துள்ளது. தமிழ் மொழியை புறக்கணித்து, இந்தியை திணிக்கும், இந்த முயற்சிக்கு, தி.மு.க, தமிழ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்