வியாழன், 23 நவம்பர், 2017

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடலை.. அதில் ஊழல்னு ஊளையிட்டவனெல்லாம் இப்ப என்ன பன்றான்..?

Saravanan Anna Durai : · 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கற்பனைக்கு எட்டாத இழப்பு ஏற்பட்டதாக பொய் குற்றசாட்டு சொன்ன வினோத் ராய் எங்கே? இன்று பாஜக அரசு 2ஜி அலைக்கற்றையை விட விலை மதிப்புள்ள V அலைக்கற்றையை ஏலத்தில் விடாமல் அவற்றை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அண்ணன் ஆ. ராஜா அவர்களின் செயலை நியாயப்படுத்துகிறது. இந்த நாட்டு மக்களிடம் கற்பனை செய்து பார்க்க முடியாத பொய் தகவலை கட்டவிழ்த்துவிட்ட மோசடி வினோத் ராய் மன்னிப்பு கேட்பாரா?  இந்த வினோத்ராய்க்குதான் பத்மா பூஷன் விருது கொடுத்திருக்கானுக

Maakkal மாக்கள் .. குறும்படம் .. மனிதர்களின் மறுப்பக்கத்தில் ஒழிந்திருக்கும் கொடுரம்



Vincent Raj : · மாக்கள் என்கிற இந்த குறும்படம் என்னை வெகுவாக பாதித்தது.அருமையாக இயக்கி இருக்கிறார் தம்பி ஜேம்ஸ் அபிலாஷ்.உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.கலக்கு பா!
Bamini Rajeshwaramudaliyar முழுமையாக பார்க்க முடியவில்லை😭 அடிக்கும் முதல் காட்சியை foreword செய்து பார்த்தேன். போலீஸ் அடிக்கும் காட்சியை பார்க்க முடியாமல் stop பண்ணி விட்டேன். High voltage currant பாய்ந்தது போல் அதிர்ச்சி. பல விதமான உணர்வுகள் உள்ளத்தை தாக்கியது. பயம் என்ற கூட்டினுள் அடைத்து , தாம் பெரியவராக வலம் வருவதற்காக செய்யும் காரியம் இது. பயம் என்ற உணர்வு மனிதர்களை முடக்கி விடும். எனக்கு பிடிக்காத உணர்வு. இதயம் பலயீனமானவர்கள் இதனை எச்சரிக்கையுடன் பார்க்கட்டும். 😡😡😡😡😭😭😭😭
 Radha Manohar இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வன்முறை காட்சிகள் எவ்வளவு கொடுரமாக இருக்கிறது ? இது உண்மையில் அடிக்கடி சமுகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவி விடப்படும் சம்பவங்களின் சித்தரிப்புதான் ,, இதை பார்க்கவே முடியாமல் இருக்கும் Bamini Rajeshwaramudaliyar போன்ற இளகிய மனமுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் , உண்மையை பார்த்தால்தான் அதை பற்றிய சரியான புரிதல் கிடைக்கும் .. இதில் இடம்பெற்ற காட்சிகள் வெறும் ரசிகர்களை திகில் ஊட்ட எடுக்கப்பட்டதல்ல . இதைவிட மோசமனான சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி இடம்பெறுகின்ற ஒரு சூழ்நிலைதான் இன்று உள்ளது. . இதைபற்றிய செய்திகள் உலகம் முழுதும் தெரியவேண்டும் .. கலாச்சாரம் சமயம் பாரம்பரியம் போன்ற சொற்களின் பின்னே ஒழிந்திருக்கும் கொடுரம் இதுதான் ,, இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றி கொண்டிருக்கும் தேசம் பெருமை பட என்ன இருக்கிறது?

ட்ரம்ப் மகள் வருகை: தெரு நாய்களைக் கொல்லும் மாநகராட்சி!

ட்ரம்ப் மகள் வருகை: தெரு நாய்களைக் கொல்லும் மாநகராட்சி?மின்னம்பலம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளில் முதல் கட்டமாக பிச்சைக்காரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நகரத்தைச் சுத்தப்படுத்துவதற்காகத் தெரு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு நவம்பர் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்துகொள்கிறார். இதனால் ஹைதராபாத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.

கந்துவட்டிகாரர்களிடம் மாமூல் வாங்கும் கேடுகெட்ட ஏவல்துறை

மின்னம்பலம் : கந்து வட்டிக் கொடுமைகளுக்கு காவல் துறையும் வருவாய்த் துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கந்து வட்டியைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அந்தக் கொடுமை தொடர்வதற்குக் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம். கள்ளச் சாராய சாவு நேரிட்டால் எப்படி அந்தப் பகுதியில் உள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை அரசு பொறுப்பேற்கச் செய்கிறதோ அப்படி கந்து வட்டி தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால் அந்தப் பகுதியில் உள்ள காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதைக் கந்து வட்டித் தொழிலில் முதலீடு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது மேலும் கறுப்புப் பணத்தை பெருகச் செய்கிறது. கறுப்புப் பண ஒழிப்பில் தீவிரமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு வருவாய் புலனாய்வுத் துறையின் மூலம் கந்து வட்டிக்காரர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது PMLA சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

துருவ ராகமௌனிகா(19),, தற்கொலை,,, சத்தியபாமா கல்லூரி மாணவி

தற்கொலைதான் தீர்வா?மின்னம்பலம் : சென்னை சத்தியபாமா பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலையைத் தொடர்ந்து கல்லூரிக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் ராஜா ரெட்டி. இவரது மகள் துருவ ராகமௌனிகா(19). இவர் சென்னை செம்மஞ்சேரி சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறார். அவருடைய சகோதரரும் அதே பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார். இவர் நேற்று (நவம்பர் 22) காலை நடந்த தேர்வில் சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து காப்பி அடித்துள்ளார். இதனைக் கண்ட பேராசிரியர் ஒருவர் ராகமௌனிகாவை தேர்வறையை விட்டுவெளியேற்றியதாகவும்,ஆடைகளைக் களையச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கல்லூரி விடுதிக்கு வந்த மௌனிகா தனியாக இருந்துள்ளார். நண்பகல் வகுப்பு முடித்து வந்த மாணவிகள், மௌனிகா அறையில் தூக்கிட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தினகரன் தொப்பி சின்னத்தை கையிலெடுக்கிறார் ... ஆர் கே.நகரில் எடப்பாடி பன்னீர் அணியை ..

மின்னம்பலம் :“இரட்டை இலை பழனிசாமிக்கு கிடைத்துவிட்டது. அதிமுக அலுவலகம் , ஜெயலலிதா சமாதி எனத் திரும்பிய பக்கமெல்லாம் பழனிசாமி, பன்னீர் ஆதரவாளர்கள் லட்டு கொடுத்தபடி இருக்கிறார்கள். இலை கிடைத்தது முதல், கொண்டாட்டம் வரை எல்லாம் மின்னம்பலம் செய்திகளில் இருக்கும். அதனால், தினகரன் தரப்பு நடவடிக்கைகளை நான் சொல்கிறேன்.
எடப்பாடி அணிக்கு இரட்டை இலை கிடைத்துவிட்டது என்ற தகவல் வந்ததுமே தினகரன் செம அப்செட் ஆகிவிட்டாராம். தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏ. ஒருவருக்கு போன் போட்டு, ‘என்னோட நம்பிக்கையே இரட்டை இலையாகத்தான் இருந்துச்சு. இப்போ அதுவும் கைவிட்டுப் போயிடுச்சு...’ என்று சொல்லி வருத்தப்பட்டாராம். அதன் பிறகு தினகரனிடம், எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேசி இருக்கிறார்.
‘நீங்க இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. இதெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியும். மோடி கையில ஆட்சி இருக்கும் போது நமக்கு எப்படி இலை கிடைக்கும்? பார்க்கலாம் அந்த சின்னத்தை வெச்சுகிட்டு அவங்களால் என்ன பண்ண முடியும்னு? நம்ம பவரை காட்ட இப்போ நமக்கு கிடைச்சிருக்கும் ஒரே வாய்ப்பு ஆர்.கே.நகர் தேர்தல்தான்.

அன்புசெழியன் பன்னீர்செல்வம் கந்துவட்டி கூட்டாளிகள் ... பன்னீர் மகனின் பாதுகாப்பில் அன்புசெழியன் !

வெப்துனியா:  நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியன் ஆளுங்கட்சி அமைச்சர் மகனின் ஆதரவில் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகர் சசிகுமாரின் கம்பெனி புரடெக்‌ஷன் நிறுவனத்தை அசோக்குமார் நிர்வகித்து வந்தார். பட தயாரிப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் அவர்தான் மேற்கொண்டு வந்தார். சசிகுமாரை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. இதில், சசிகுமாருக்கு பல கோடி நஷ்டம் எனக் கூறப்படுகிறது. அப்படத்திற்கும் அன்பு செழியனிடமே கடன் வாங்கியிருந்தார் சசிகுமார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ்-ஒபிஎஸ் மலர்தூவி மரியாதை

தினத்தந்தி : சென்னை, அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.  கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஒதுக்கியது. இதனால், அவர்கள் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் முதல் அமைச்சர் அணியினர்  உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சின்னம் மீண்டும் கிடைத்துள்ள நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர், துணை முதல் அமைச்சர் வருகை தந்தனர்.அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 

உடுமலைபேட்டை ஆணவக் கொலை குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு ! பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு


உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த சங்கர் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரின் காதல் மனைவி கௌசல்யா உயிருடன் பிணமாக வாழ்கிறார். சமீபத்திய பரபரப்புகளில் மூழ்கிப்போன தமிழகம், நேற்று வெளியான ஒரு தீர்ப்பைக் கவனிக்கவில்லை.
படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கவனிக்கப்பட வேண்டிய அந்தத் தீர்ப்பை எழுதியவர் நீதிபதி எஸ். வைத்தியநாதன் என்பவர்.
விடுவிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி எழுதிய வரிகளில் மிக முக்கியமானவை கீழே:
''மிக முக்கியமான மாறிச்செல்லும் கட்டத்தை நமது தேசம் கடந்துகொண்டிருக்கிறது. (அதுபோன்ற சூழலில்) மிக முக்கியமான பொது நலன் குறித்த இதுபோன்ற வழக்கில் நீதிமன்றம் மௌனமாக இருக்க முடியாது. தேசத்திற்கான சாபம் இந்த சாதி முறை. அதனை எத்தனை விரைவாக அழித்து முடிக்கிறோமோ அத்தனை நல்லது. தேசத்தின் முன்னுள்ள சவால்களைச் சந்திப்பதற்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சூழலில், சாதி தேசத்தைப் பிளவுபடுத்துகிறது.

வெளியேற்றப்படும் சென்னை குடிசை வாசிகள் .... அப்போலோவும் ஸ்கைலார்க்கும்...

திருமுருகன் காந்தி : குடிசைகளை அகற்றுவதை நியாயப்படுத்தும் அரசும், அதன் ஆதரவாளர்களும் அப்பல்லோ மருத்துவமனை-லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டல்-ஸ்கை வாக் ஷாப்பிங் மால் ஆக்கிரமித்த கூவம், அடையாறு ஆற்றுப்பகுதிகளை கால்வாய்களைப்பற்றி பேசுவதில்லை. குடிசைகளை அடித்துச் செல்லும் வெள்ளம், கார்ப்பரேட் கட்டிடங்களில் அடங்கி ஒதுங்கி ஓடுகிறது. நம் குழந்தைகள் வருடத்தின் பாதியில் பள்ளியிலிருந்து வெளியேறி செல்வ்தை நம்மால் சகித்துக் கொள்ள இயலுமா?...
தினம் தோறும் காலை உணவு, மதிய உணவு எடுக்காமல் 25 கி.மீ பள்ளிக்கூடத்திற்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்வதை ஏற்றுக்கொள்ள இயலுமா? 
போட்க்ளப், க்ரீன்வேஸ் சாலை பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் பற்றி கிஞ்சித்தும் பேச மறுப்பவர்களின் மெளனத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள். கோடீஸ்வரரர்கள் தங்கள் பகுதியை விட்டு 30 கிமீ தள்ளி வசிப்பது கடினம் என்பதால் ஏழைகளை 30 கி.மீ தொலைவிற்கு விரட்டுகிறது அரசும், அதிகாரவர்க்கமும்.

திருமதி பிரதீபா லெனின் மறைவு ..நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி என்ற அடையாளத்துக்குள் ஒடுங்குபவர் அல்ல பிரதிபா. முகநூலில் மிகத் தீவிரமாக சமூக, அரசியல் பிரச்சினைகளில் இயங்கியவர். முகநூலில் மட்டுமல்லாமல் பல இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள்
எழுதியவர்.கடாபியின் வரலாற்றைத் தொகுத்து ஒரு நூல், நடப்பு நிகழ்வுகளையும் தன் அனுபவங்களையும் கோர்த்து ஒரு பெண்ணின் பார்வையில் எழுதிய 'நிழலாய்த் தொடரும் நிஜங்கள்' என்ற நூல், அழகு என்பது மனதின் உண்மையில், வலிமையில் உள்ளது என்ற கருத்தை மய்யப்படுத்தி அவர் எழுதிய அழகுக் குறிப்புகள் குறித்த ஒரு நூல், இன்னும் சில கட்டுரைத் தொகுப்புகள், பிற பதிப்பகப் பணிகள் என தொடர்ந்து இயங்கி வந்தவர்.திருநங்கையர் நலனுக்காகச் செயல்படும் 'பார்ன் டு வின்' என்ற அமைப்பின் கௌரவப் பொறுப்பில் இருந்தபடி, திருநங்கையருக்கான பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர். திருநங்கையர் குறித்த அவர் எழுதிய நூல் இப்போது அச்சில் இருக்கிறது.

இரட்டை இல்லை எடப்பாடி + பன்னீர் அணிக்கு கிடைத்தது .... இனி பாலாறும் தேனாறும் ஓடும் ?

தினத்தந்தி  : ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டு அணியாக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் என செயல்பட்டு வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன. வேறு வழியில்லாமல், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட தயாராகின. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன.

பன்சாலியின் "பத்மாவதி" 1963ல் தமிழில் வந்த சித்தூர் ராணி பத்மினி தான்


BBC ;கே. முரளிதரன்:   ராணி பத்மினி குறித்த சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி ;திரைப்படம், வட இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தாலும், 1963ல் தமிழில் இதே பின்னணி; கதையோடு ;வெளிவந்த சித்தூர் ராணி பத்மினிgt;திரைப்படம்,<> சிறிய சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை.
ராஜஸ்தானின் ராணி பத்மினியின் கதை இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்று என்றாலும் அதுவரை அந்தக் கதை தமிழில் வெளியாகியிருக்கவில்லை என்பதால், அந்தக் கதையை படமாக எடுக்க முடிவுசெய்தார் உமா பிக்சர்ஸின் ஆர்.எம். ராமநாதன். படத்தை சித்ரபு நாராயணமூர்த்தி இயக்கினார். கதை, திரைக்கதையை ஸ்ரீதரும் இளங்கோவனும் எழுதினர்.
சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ். பாலையா, கே.ஏ. தங்கவேலு என அந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர்கள் பலரும் படத்தில் இருந்தனர். 1963 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி சித்தூர் ராணி பத்மினி வெளியானது.

உடைகிறதா மோடியின் குஜராத் வளர்ச்சி பிம்பம் - கைப்பற்றுமா காங்கிரஸ்

Special Correspondent FB Wing  : 1995-ம் ஆண்டிலிருந்து குஜராத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வருவது பா.ஜ.க-தான். இந்த 22 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் நரேந்திர மோதி முதல்வராக இருந்திருக்கிறார்.
ராகுல் காந்தியின் புகைப்படத்தை 18 வயது காஜலிடம் காட்டியபோது, அவர் புகைப்படத்தில் உள்ள நபர் ஹர்திக் பட்டேல் என்றார்.
இந்த தேர்தலில்தான் முதன்முறையாக வாக்களிக்கப் போகும் கஜோல் விஷ்ணு இருவருக்கும் காங்கிரஸைப்பற்றியோ, அதன் இளம் தலைவரைப் பற்றியோ தெரியவில்லை.
பொருளாதார நிலை காரணமாக, அவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு வரைதான் படித்து இருக்கிறார்கள். விஷ்ணு தினக்கூலியாக பணியாற்றுக்கிறார். காஜல் தையற்கலை கற்றுவருகிறார். அதன் மூலம் பணம் ஈட்டுவது அவரது நோக்கம். காஜல் தன் கிராமத்தின் வளர்ச்சியை விரும்புகிறார். மின்சாரம் வேண்டும், கழிப்பறை வேண்டும் என்கிறார்.
எங்களின் பிரச்னைகள் குறித்து யாரும் கவலைக் கொள்ளவில்லை என்று சொல்லும் அவர்கள், "மோதி ஒருபோதும் இங்கு வரமாட்டார். அவர் ஆகாயத்தின் வழியாகவே பறந்து சென்றுவிடுவார். கீழே வந்தால்தானே நாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் புரியும்? ஆனால், இந்த நிலைக்கு மாற்றும் இல்லை."

பாஜக வழக்கறிஞர் பாலாஜி மர்ம மரணம் ... வானதி சீனிவாசன் மகிழ்ச்சி...


ஓரே ஒரு உத்தமி...வானதி சீனிவாசனின் மர்ம உலகம்.
பாஜக வழக்கறிஞர் பிரிவில் உள்ளவர் பாலாஜி. அவர் இரு மாதங்களுக்கு முன், திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்து சிகிச்சை பலனின்றி கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்து போனார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரிடம் 3 கோடி ரூபாய் பணம் இருந்தது. அந்த பணம் அப்படியே இருந்தது காணாமல் போகவில்லை. < இந்த பாலாஜி, பிஜேபியை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணிடம் இருந்து, திருவான்மியூரில் ஒரு நிலத்தை வாங்குகிறார். இந்த கிருத்திகா தற்போது மதுரையில் வசித்து வருகிறார். கிருத்திகாவும், வானதியும் நெருங்கிய நண்பர்கள். திருவான்மியூரில் வாங்கப்பட்ட நிலத்தை, கிருத்திகா குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாக வானதி கூறி, அதில் தகராறு செய்யச் சொல்கிறார். அதன்படி கிருத்திகாவும் பாலாஜியிடம் தகராறு செய்கிறார். தகராறு முற்றவே இறுதியாக, பாஜகவின் அமைப்புச் செயலாளர் மோகன்ராஜுலு தலையிட்டு சமரசம் செய்துள்ளார்.

இதையடுத்து, கடுப்பான பாலாஜி, வானதியின் ஸைலாக் ஊழல்கள் குறித்து முழுமையான தகவல்களை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று, அமித் ஷாவை சந்தித்து அத்தனை ஆதாரங்களையும் அவரிடம் அளித்தள்ளார். விபத்து நடந்தபோது பாலாஜியோடு காரில் சென்ற நண்பருக்கு எந்த காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார். பிஜேபியில் உள்ள பாலாஜி நண்பர்கள், பாலாஜியின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று சந்தேகிக்கின்றனர். திருவான்மியூரில் பாலாஜி வாங்கிய நிலத்தில், வானதிக்கு என்ன ஆர்வம் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

நீதிபதி லோயா மரணம் ... போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை விடுவிக்க ரூ 100 கோடி பேரம்

மும்பை, 2005 ஆம் ஆண்டு சொராபுதின் சேக் போலி எண்கவுண்டர் மூலமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா-வை ஜூலை 2010 அன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 2012 அன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் டிசம்பர் 2014 அமித்ஷாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.
இதற்கிடையில் பாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிர்ஜிகோபால் ஹர்கிஷன் லோயா , 2014 நவம்பர் 30 இரவு டிசம்பர் 1 இடையிலான நேரத்தில் நாக்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது உயிரிழந்தார். அந்த சமயம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

சென்னை குவியல் குவியலாக மக்கள் வெளியேற்றம்.. அப்புறப்படுத்தும் தமிழக அரசு!

CPIM Chennai South : குவியல் குவியலாக மக்கள் வெளியேற்றம்:
சென்னையிலேயே அடுக்குமாடி
வீடுகள்: #CPIM வலியுறுத்தல்.
நீர்வழிக்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றப்படும் பகுதிக்கு அருகாமையிலேயே அடுக்குமாடி வீடுகளாக கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை கூவம் நீர்வழிக்கரையோரம் உள்ள பல்லாயிரக் கணக்கான வீடுகளை அப்புறப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரசு விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமல், புதிய ஆலோசனைகளை ஏற்காமல் இந்த அப்புறப்படுத்தலை செய்து வருகிறது.
நகர்ப்புற ஏழைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டிய அரசு, குறைந்தபட்ச சலுகைகளைக் கூட வழங்காமல் வெளியேற்றுவது அரக்கத்தனமாகும்.

அன்புசெழியன் தரப்பு : அசோக்குமார் கடிதத்தில் உண்மை இல்லை! ஆமா நீங்க ரொம்ப நல்லவரு

tamilthehindu :சசிகுமார்தான் பணம் பெற்றார்; அசோக்குமார் கடிதத்தில் எள்ளளவும் உண்மையில்லை என்று அன்புசெழியன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காவல்துறை தொடர்பாக அன்புசெழியனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளர் முரளி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புசெழியனின் Flashback சுருக்கம்

நக்கீரன் :அசோக் குமார் நேற்று (21-நவம்பர்-17) சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் , தனது அத்தை மகனும், 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகியுமான அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமென, அசோக் குமார் எழுதிய கடிதத்துடன் காவல்துறையில் புகாரளித்துள்ளார் நடிகர் சசிகுமார். ஜிவி 2003ஆம் ஆண்டு மே மாதம்... தன் குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்ற அந்த பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர், சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு தான் மட்டும் சென்னைக்குத் திரும்பினார். வந்தவர், தன் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அந்தத் தயாரிப்பாளர் ஜிவி என்று சினிமாவில் அழைக்கப்பட்ட ஜி.வெங்கடேஸ்வரன். இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன், மௌனராகம், அக்னிநட்சத்திரம், தளபதி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்தவர்.
கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற போது, திரையுலகமும் மக்களும் அதிர்ந்தனர். அப்போது சத்தமில்லாமல் முனுமுனுக்கப்பட்டது பைனான்சியர் 'மதுரை அன்பு' என்ற பெயர். 'தமிழன்', 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' படங்களின் தோல்வியைத் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட, ஜிவி கடன் வாங்கியிருந்த பைனான்சியர், வட்டி மேல் வட்டி கட்டிய பின்பும், மிக தரக்குறைவாக அவமானப்படுத்தியதாலேயே தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. அன்புச்செழியன் பின், தயாரிப்பாளர் காஜாமைதீனின் தற்கொலை முயற்சியின் போதும் தொடர்பிருந்ததோ இல்லையோ அந்தப் பெயர் அடிபட்டது.

சத்துணவு முட்டையில் சத்துணவு அமைச்சர் சரோஜா கமிஷன் நிக்காலோ!

நக்கீரன் :குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுங்க என்று உலக சுகாதார நிறுவனம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறது."
ஏழைக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை சத்துணவுக் கூடங்களில் வழங்கினார் கலைஞர். ஆனால் இப்போது அதற்கும் ஆபத்து என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
ஒருபக்கம் முட்டை உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதன்காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக செய்திகள் பீதியைக் கிளப்புகின்றன. தமிழகத்தில் 4 ரூபாய்க்கு விற்ற முட்டை 7.00 ரூபாய் முதல் 7.50 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்ந்தது உயர்ந்தபடி இருக்க, இப்போது முட்டை விலையும் உயர்ந்திருப்பது ஏழை எளிய நடுத்தர மக்களின் அசைவ உணவுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது.

தோழர் மருதையன் : 1917ஐ மீண்டும் படைப்போம்”


“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், இந்தியாவில் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்கும் 50 -வது ஆண்டு” ” ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்” என்பதை தனது உரையில் பேசினார்.

கந்துவட்டி அன்புச்செழியன் ...கமல் மவுனம் ஏன்?


சினிமா துறையில் கந்துவட்டி: கமல் மவுனம் ஏன்?தினமலர் :கந்து வட்டி பிரச்னை குறித்து, நடிகர் கமல்ஹாசன் மவுனம் சாதிப்பது, அத்துறையை சார்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், கமல் கருத்து வெளியிட்டு வருகிறார். தவறுகளை கண்டு பொங்கிய பாரதியாரை போல், டுவிட்டரில், முண்டாசு தரித்த கோலத்தில், தன் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார். அதனால், அவர் சார்ந்த திரையுலக பிரமுகர், கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை செய்த விவகாரத்தில், ஆத்திரம் தெறிக்க பொங்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல், வாய் திறக்காமல் இதுவரை மவுனம் காக்கிறார்.
தேச நேசன் : ஏதோ ஒரேயொரு பைனான்சியரிடம் மட்டும் கடன் வாங்கியவன் அலறுவான் ஆனால் ஊர் முழுக்க கடன் பாக்கி வைத்திருப்பவர்களும் பலபேருக்கு பணம் செட்டில் செய்யாமல் காலம் கடத்துபவர்களும் எப்படி வாயை திறக்கமுடியும் ? ஹே ராம் பட நேரத்தில் வருடக்கணக்கில் பலருக்கு பாக்கிவைத்து நோகடித்தது மறக்குமா?
ஜகன் சென்னை : அவர் அரசியல் கட்சி ஆரம்பிச்சு பாதுகாப்பு தேடுவதே நிழல் உலக தாதாக்களிடம் இருந்து தப்பிக்கவே ....2 MLA இருந்தால் பெரிய கட்சியோடு கூட்டணி போட்டு தப்பிக்கலாம் ........ இப்போ புரியுது இவர் ஏன் இப்பிடி பிதற்றுகிறாரார் என்று.... நிஜமாவே பாவம்

மோடியின் சிந்தனைக் களஞ்சியத்தில் மூழ்கி முத்தெடுத்த திராவிட "கவி"


Annamalai  : பார்ப்பனீயம் என்பது என்ன ?
அது ஒரு மனப்பான்மை
அது பார்ப்பனராகப் பிறந்தவர்கள் இடம் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது.
அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சொல்லட்டுமா ?
எப்படியாவது யாரைச்சார்ந்தாவது
ஈனப்பட்டாவது மானம் கெட்டு
பிழைப்பதும் அப்படிப் பிழைப்பதை
பெருமையாகக் கருது வதும்
பார்ப்பனீயத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.
இங்கிலாந்தின் ஆட்சியில் இந்தியா இருந்தபோது மிலேச்சபாஷையான இங்கிலீஷ் படித்து ஆள்பவர்களின் பக்கத்தில் நின்று பிழைப்பு நடத்தியவர்கள்
ஹிட்லரின் படை முன்னேறுகிறது..இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து தோற்றுவிடும் நம்மை ஜெர்மனி தான் ஆளப்போகிறது என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியவுடன் அவசர அவசரமாக ஜெர்மனி மொழியை படிக்கத் தொடங்கியதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம.
திடீரென்று திராவிட இலக்கியம் மோடியின் சிந்தனைக் களஞ்சியத்தில் மூழ்கி முத்தெடுப்பதும் கூட
பார்ப்பனீயம்தான் என்று நான்நினைக்கிறேன்.
நீங்கள் ?

அன்புசெழியன் அதிமுக மதுரை வடக்கு அல்லது கிழக்கில் தேர்தலில் நிற்க முயற்சித்தவர்

மின்முரசு :மதுரை : தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மதுரையில் நேற்றிரவு நிருபர்களிடம்  கூறியதாவது: சினிமா தயாரிப்போர் அனைவரும் வட்டிக்கு கடன் வாங்கித்தான் படம் தயாரிக்கிறோம். வெற்றுப்பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்துத்தான் பணம் வாங்க முடிகிறது. ஒரு மாத வட்டி செலுத்த இயலவில்லை என்றால், அதனை அடுத்த மாதமே செலுத்தி விடுகிறோம். அப்படி இருக்கும்போது அசோக்குமார் மிரட்டப்பட்டு, பலியாகி இருக்கிறார். கந்துவட்டிக்கு பலியான அசோக்குமாரின் மரணம்தான், கடைசி மரணமாக இருக்க வேண்டும். இவர் மரணத்திற்கு காரணமான அன்புச்செழியனுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.
அமைச்சர் ஒருவரின் (பன்னீர்) ஆதரவில், அன்புச்செழியன் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார். சம்பந்தப்பட்ட பைனான்சியருக்கு ஆதரவாக அமைச்சர்களோ, அதிகாரிகளோ யார் வந்தாலும் அவர்களையும் நாங்கள் சும்மா விட மாட்டோம். அசோக்குமாரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமான அன்புச்செழியன் மீது பல வழக்குகள் உள்ளன. இப்படி பல வழக்குகள் இருந்தும் அவர் சுதந்திரமாகத் திரிகிறார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிப்போம்.
இவ்வாறு தெரிவித்தார்.

ஜெயலலிதாவை கொன்றது யார்?.. தமிழச்சியின் புதிய விபரங்கள்.. மோடி ...

ஒன்று #மோடி தூக்கில் தொங்குவார். அல்லது வழக்கம் போல் உண்மை தெரிந்த நபர்களை #மோடிஅரசு படுகொலை செய்து கொண்டிருக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டதிலிருந்தே தமிழச்சி என்பவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வந்தார். அவர் தற்போது தனது முகநூலில் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.அவர் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு…
"அக்டோபர் 1 முதல் சசிகலா, ஜெயலலிதாவை பார்க்கவில்லை" - #தினகரன்< "ஜெயலலிதா, இட்லி சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்." - #அமைச்சர்திண்டுக்கல்சீனிவாசன்< மேற்குறிப்பிட்ட இரு செய்திகளும் ஒரே நாளில் பத்திரிகைகளில் வந்தவை. "ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எங்கள் யாரையும் சசிகலா குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூட்டாக அப்போது சொல்லியது பொய்" என்கிறார்  #திண்டுக்கல்_சீனிவாசன்.
தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக சசிகலா குடும்பத்தினரை புறக்கணிக்க வேண்டும். ஜெயலலிதா படுகொலைக்கு முழு பொறுப்பும் சசிகலா குடும்பத்தினர் மீதே விழ வேண்டும் என்பதற்காக ஏவப்பட்ட ஒரு அம்பு திண்டுக்கல் சீனிவாசன். காசுக்கு 'பீ' தின்னும் பன்றி.
இந்த பன்றியின் உறும்பலுக்கு தினகரன் எதிர் பாய்ச்சல் மோடிக்கும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.