வியாழன், 23 ஜூலை, 2020

’உள்ளம் உருகுதையா முருகா… கந்த சஷ்டி கவசம் . சாவித்திரி கண்ணன்

சாவித்திரி கண்ணன் : முருக பக்தனாக இருந்த போதிலும் தனிப்பட்ட முறையில் கந்தசஷ்டி கவசம் பாடலை நான் ஒரு முறை கூட பாடியதே இல்லை! பாடவேண்டும் என்று தோன்றியதும் இல்லை!
ஆனால்,சின்னஞ் சிறிய வயதில் இருந்து அந்தப் பாடலை பல நூறு முறை யதேச்சையாக கேட்டு வந்துள்ளேன்! நானாக விரும்பி ஒலிக்கவிட்டு கேட்டதில்லை!
டி.எம்.எஸ்சின் நிறைய முருகன் பாடல்களை மீண்டும்,மீண்டும் கேட்டு உள்ளம் கனிந்து கசிந்துருகியுள்ளேன்!
’’உள்ளம் உருகுதையா முருகா…’’
’’அழகென்ற சொல்லுக்கு முருகா’’
இந்த இரண்டும் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை!
’’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா..’’என்ற பாடலில் வரும்
’’உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது – அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ..’’ என்ற வரியில் நெஞ்சம் நெக்குருகிவிடும்!
என் வாழ்க்கையில் இடையில் ஒரு பதினைந்து ஆண்டுகள் எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தது! ஆனால்,அப்போதும் கூட இந்தப் பாடல்களை நான் விரும்பி கேட்டுள்ளேன். உருவ வழிபாடுகள் அனைத்தும் நமது கற்பிதங்கள் என்பதை இன்றும் நான் நன்கு உணர்ந்தாலும் கூட, பக்தி இசையில் மனம் லயிப்பது ஏதோ ஒரு வகையில் எனக்கு மகிழ்வைத் தருகிறது.

புதன், 22 ஜூலை, 2020

RSS Formula!.. பொய்களை பரப்பி நாட்டை சூறையாடும் குள்ள நரி கூட்டம்

Kandasamy Mariyappan : RSS Formula!
மாநிலத்தில் உள்ள பிரபலமான கட்சியின் மீது அபாண்டமாக ஒரு பொய் சொல்லனும், பிறகு அதை அப்படியே Maintain பன்னனும். எதிர்ப்புகள் பற்றி கவலைப்பட கூடாது! 10% மக்கள் இந்த பொய்யை ஏற்றுக் கொண்டால் போதும்!
News 18 விவாதத்தில் திரு. நாராயணன்...
70களில் தமிழ்நாடு வந்த திரு.மண்டல் அவர்களை திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி மற்றும் திராவிட கழக தலைவர் திரு.கி. வீரமணி இருவரும் பார்க்க மறுத்து விட்டனர் என்கிறார்.
News 18 திரு. குணா, அந்த சந்திப்பு நடந்த இடமே பெரியார் திடலில் தானே நாராயணன் என்கிறார்.
விவாதம் முடியும் பொழுதும் நாராயணன் மீண்டும் அதே பொய்யை கூறி முடிக்கிறார்.

News 7ல் திருமதி வானதி அவர்கள், சம்மந்தமே இல்லாமல்...
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை திமுக ஆட்சியில் உருவானது என்கிறார்.

புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு முழுக் காரணம்... flashback

தமிழ் மாணவன் : பகுதி-1 வன்னியில் என்ன நடந்தது?
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு
உண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.
வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன.
ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.

கலைஞர் கட்டமைத்த மின்சார மேலாண்மை .. ..முழு விபரம் .. பட்டியல்

A Sivakumar. : கலைஞரும் மின்சாரத்துறையும்
கலைஞரின் சாதனைகள் என்று துறைவாரியாக எல்லாத்தையும் எழுதுறீங்களே மின்சாரத்துறை பற்றி எழுதுங்களேன் என்று தம்பி Meera Sarkhan கேட்டிருந்தார்.
அதற்காக தகவல்களை தேட துவங்கியதும் தான் திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது என்று புரிந்தது.
காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்ற கேவலமான பொய்க்கு இணையான கேவலம் தான் இந்த மின்சாரம் தொடர்பான குற்றச்சாட்டும்.
அது எப்படி என்று புரிந்துக்கொள்ள திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை பார்க்கலாம்,
1. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970
2. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970
3. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971
4. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971
5. வைகை 6 MW மின் திட்டம், 1990
6. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990
7. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998
8. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000
9. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001
10. பவானி கட்டளை பேரேஜ்-II, 30MW, 2011
11. பெரியாறு வைகை மினி - I, 4 MW, 2011

சென்னை ஓஎம்ஆர்.. வெறிச்சோடியது ...காற்று வாங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள்.. காலியான வீடுகள்

அலுவலகங்கள் காலி tamil.oneindia.com - VelmuruganP : சென்னை: கொரோனா அதிகரித்த காரணத்தால் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லிவிட்டு சென்னையில் செயல்பட்டு வந்த பல ஐ.டி நிறுவனங்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டன. இதனால் சென்னை ஓஎம்ஆர் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
வானுயுர்ந்த ஐடி கட்டிடங்கள் ஆள் இல்லாமல காற்று வாங்குகின்றன. 25K. 20K என்று வாடகை வாங்கிய வீட்டு ஓனர்கள் இப்போது மொத்தமாக வீடுகள் காலியாக கிடப்பதால் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். சென்னை முழுக்க ஏராளமான வீடுகளில் டூலெட் போர்டு தொங்குகிறது
சென்னை நகரில் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. கட்டிட தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் நிலத்தின் மதிப்பும் சரியும் அபாயமும் உள்ளது. ஒரு வேளை நிறுவனங்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினால் கற்பனைக்கும் அப்பாற்றப்ப்டட வீழ்ச்சியை சென்னை சந்திக்கும்.

கூட்டு குடும்பத்திற்குள் கொரோனா: 18 பேருக்கு பாதிப்பு - 9 நாட்களில் சகோதரர்கள் 3 பேர் உயிரிழப்பு

கூட்டுக்குடும்பத்திற்குள் புகுந்த கொரோனா: 18 பேருக்கு பாதிப்பு - 9 நாட்களில் சகோதரர்கள் 3 பேர் பலிமாலைமலர் : கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் 9 நாட்களில் வைரஸ் தாக்குதலுக்கு அடுத்தடுத்து 3 சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிரிம்பிஹான் கிராமத்தை சேர்ந்தவர்கள் போபட்ராவ் கலப்யூர் (66), டைனேஸ்வர் கலப்யூர் (63) திலீப்ராவ் கலப்யூர் (61). 
சகோதரர்களான இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். மனைவி, மகன்கள், மகள்கள் என இவர்களின் கூட்டுக்குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 18 பேர் ஆகும். இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கலப்யூரின் கூட்டுக்குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கலப்யூரின் குடும்ப உறுப்பினர்களில் முதல் நபராக வாலிபர் ஒருவருக்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று - அதிர்ச்சி

பெரும்பாலான மக்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றைக் கொண்டிருக்கின்றனர்BBC : கொரோனா வைரஸ்: டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று - அதிர்ச்சி தரும் ஆய்வு பெரும்பாலான மக்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றைக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பவர்களில் நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் எனப் பரவலாக எடுக்கப்பட்ட ஆண்டிபாடி பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. டெல்லியில், 21,387 பேரிடம் எடுக்கப்பட்ட கோவிட்-19 'ஆண்டிபாடி' பரிசோதனையில் 23.48 சதவீதம் பேரின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு அணுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையை விட, டெல்லியில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

பத்திரிக்கையாளர் மகள்கள் முன்பு துப்பாக்கியால் சுட்டு கொலை .. உத்தர பிரதேசத்தில் வீடியோ


மின்னம்பலம் : உத்தர பிரதேச பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தனது இரண்டு மகள்களுடன் டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில் கடந்த 20ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சுமார் 10.30 மணியளவில் அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார் விக்ரம். ஆனால், பைக்கை சுற்றிவளைத்த அந்த கும்பல், அவரை கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
தாக்குதலால் அதிர்ச்சியடைந்த விக்ரமின் இரண்டு மகள்களும் பீதியுடன் சம்பவ இடத்திலிருந்து உதவிக்காக ஓடினர். தாக்கிய கும்பல் விக்ரமை தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது. சிசிடிவி காட்சிகள் சாலையில் காயத்துடன் விக்ரம் ஜோஷி விழுந்து கிடப்பதையும், அவரது மகள்களில் ஒருவர் அழுதுகொண்டே உதவிக்காக கத்தியதையும் காட்டியது. இந்த சம்பவம் பத்திரிகையாளர் வீட்டின் அருகிலேயே நிகழ்ந்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!மின்னம்பலம் : தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 3000த்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி, சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும், போலீசார் தாக்குதலால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இது பார்ப்பனீயத்துக்கு எதிரான போர்.. சவுக்கு சங்கர்

savukkuonline.com : பெரியார் தொடங்கிய ஆரிய / பார்ப்பனீயத்துக்கு எதிரான போரை மீண்டும் தமிழர்கள் கையிலெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத்தியில் மோடியின் ஆட்சி இருந்தாலும் கூட, ஜெயலலிதாவோ, கருணாநிதியோ உயிரோடு இருந்த வரையில், பார்ப்பனீய சக்திகள் அடக்கியே வாசித்தன.   கருணாநிதி, தன் வாழ்நாளின் இறுதி வரையில் பார்ப்பனீய சதியை புரிந்தே வைத்திருந்தார்.  சமயம் கிடைக்கும்போதெல்லாம்பார்ப்பனீயத்தின்ஆபத்தை சுட்டிக்காட்ட கலைஞர் தவறியதேயில்லை.
‘ஆமாம் நான் ஒரு பாப்பாத்தி தான்’ என்று சொன்னாலும், பார்ப்பனர்கள் குருவாக வணங்குகிற ஜெயேந்திரனையும், விஜயேந்திரனையும் சிறையில் அடைத்தது ஜெயலலிதா தான் என்பதை நாம் மறுக்க முடியாது.
ஜெயலலிதா மீதும், கருணாநிதி மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கிறது.   ஆனால்,  இவர்கள் இருவருமே, , இந்துத்துவா அமைப்புகள் எத்தகைய தீயசக்திகள் என்பதை உணர்ந்தே இருந்தனர்.   

கறுப்பர் கூட்டம் சுரேந்தர் சுந்தர வள்ளி கூட்டுசதி.... ?

Kalai Selvi சுரேந்தர் - கருப்பர் கூட்டம்- சுந்தர வள்ளி கூட்டுசதி
கூட்டுசதி -1
சுரேந்தரை முதலில் Cpim ன் செம்புலம் U tube மூலம் பேட்டி கண்டது சுந்தர வள்ளி.
பின்னர் கறுப்பர் கூட்டத்தை 6 மாதம் முன்பே மாரிதாஸ் டார்கெட் செய்த போதும் அப்போது கைது இல்லை.
கூட்டுசதி -2
நாதக &இந்து மக்கள் கட்சிVs சுந்தரவள்ளி என பி.ச்சனை வந்தபோது நாதகவின் அடையாளமான முருகனை சுரேந்தரை வைத்து பேச வைப்பது என சுந்திரவள்ளி பிளானாக இருக்க வாய்ப்பு அதிகம். அதைதான் மேலே உள்ள U tube video காட்டுது
கூட்டுசதி - 3
சுரேந்தரின் கருப்பர் கூட்டம் அலுவலகம் செயல்படும் இடம் T.nagar மிக முக்கியமான இடம். கிட்டதட்ட மாதம் லட்சம் வாடகை வரும் இடம் எப்படி இவர்களுக்கு கிடைத்தது.?
சுரேந்தர் U to brutus U tube பேட்டியில்கறுப்பர் கூட்டைம் எந்த வருமானமும் வரவில்லை என்று கூறியுள்ளார்.பின்னர் எப்படி இவ்வளவு வாடகை உள்ள இடத்தில் வைத்து Channel நடத்த முடியும்?
கூட்டுசதி -4
இ.பாஸ் இல்லாமல் புதுவை மாநிலத்திற்கு சுரேந்தர் ஓடியது ஏன்?
ஒரு கருத்தை சொல்லிவிட்டு அதனை நெஞ்சு உயர்த்தி நிற்பதுதான் பெரியார் ஸ்டைல். ஆனால் பழைய Rss காரர்னான சுரேந்தரின் செயல் சரியா?

வனிதா லக்ஷ்மி ராம்கி சண்டையில் சூடாகும் ட்விட்டர் வார்.. சீண்டிய கஸ்தூரி .

Parthiban Pakirisamyy : நீ புகுந்து விளையாடுமா ! 
நம்முடைய வனிதாக்களை நாம் ஆதரிக்கவேண்டிய தருணம் இது என்றால் மிகையல்ல. ஒரு பெண் தைரியமாக தனித்து இந்த சமூகத்தில் வாழ்வதென்பது எத்தகைய செயற்கரிய செயல் என்பதற்கு இன்னுமோர் சான்று தேடவேண்டியதில்லை. திரௌபதி எனும் புராண கதாபாத்திரத்தை ஆதரிக்கும் நம்மால் வனிதாக்களை ஆதரிக்க இயலவில்லை என்பது வியப்புதான். ஆம், குண்டி காட்டி மானியத்தை ஆதரிப்பவர்களால் ஆங்கிலம் பேசும் வனித்தாக்களின் வளர்ச்சியை தன்னம்பிக்கையை தனித்து போராடும் துணிவை பொறுத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால் சக சூத்திர பெண்கள் ஏன் எதிர்க்கவேண்டும்? உங்கள் பெண்ணியத்தின் கடைசி பக்கங்களும் எரிந்துபோயிற்றா?
சூடாகும் ட்விட்டர் வார்..பயந்துட்டியா குமாரு? சீண்டிய கஸ்தூரி.. கிறுக்குத்தனம் பண்ணாத..எகிறிய வனிதா!
/tamil.filmibeat.comசென்னை: நடிகை கஸ்தூரியை, வனிதா மீண்டும் கண்டபடி சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  வீட்டு
சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா நடிகை வனிதா விஜயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன் வாக்குவாதம் கொரோனாவை விட கொடுமையாக நடந்து முடிந்திருக்கிறது, ட்விட்டரில். இன்னும் தொடரும் போலிருக்கிறது இந்தக் காட்டமான பஞ்சாயத்து. அதிரடியாக பேசி, அமைதியான லட்சுமி ராமகிருஷ்ணனை ஆக்ரோஷமாக்குகிறார் வனிதா; முறையாக விவாகரத்து பெறாத பீட்டர்பாலை, மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் நடிகை வனிதா. எப்போதும் பரபரப்பாக இருக்கும்வனிதா, இதன் மூலம் பரபரப்பானார். வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரியும், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களுக்கும் வனிதாவுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட வாய்க்கா வரப்பு பஞ்சாயத்து

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

தினத்தந்தி : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும்,
இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.
புதுடெல்லி: உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை*

செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை*
ஊடகத்துறையினர் இன்று தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பல்முனை தாக்குதலைஎதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் சில சக்திகள் ஊடகங்கள், பத்திரிகைகள் இதைத்தான் பேச வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில் உத்தரவிட முயல்கின்றன.
பல கருத்து உடையவர்கள் ஊடகத்தில் இணைந்து பணியாற்றும் நிலையில் குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்டவர்கள் மட்டும் ஊடகத்தில் இடம் பெறக்கூடாது என்ற பிரச்சாரத்தை அந்த சக்திகள் முன்வைக்கின்றன. அந்த சக்திகள், சில ஊடகங்களின் உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி குறிப்பிட்ட சிலரை நீக்க வேண்டுமென்றும் அச்சுறுத்துகின்றன.
சுதந்திரப் போராட்ட காலத்திலும் எமர்ஜென்சியிலும் பத்திரிகைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் தணிக்கை முறையை சந்தித்து அந்த அடக்குமுறையிலிருந்து வெற்றிகரமாக மீண்டு உள்ளன. இன்றைய சூழலில் தங்களைத் தாங்களே நடுநிலையாளர்கள், தேசபக்தர்கள், என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு புறப்பட்டுள்ள சக்திகளின் அச்சுறுத்தல் அதிகமாகி விட்டது. தமிழ்நாட்டில் திட்டமிட்ட நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.

செவ்வாய், 21 ஜூலை, 2020

Youtube நோகாமல் நுங்கு தின்னும் போலி யூட்டூப் சேனல்கள்

Shalin Maria Lawrence : நோகாமல் நுங்கு திண்ணுபவர்கள்.
யூட்டுப் சேனலில் காசு பார்க்க வேண்டுமென்றால் உழைக்க வேண்டும்.புதிதாக சிந்திக்க வேண்டும்.புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும்.மூளையை உபயோகிக்க வேண்டும்.
ஆனால் இதயெல்லாம் செய்யாமல் பணம் சேர்க்கும் கேடுகெட்ட கும்பல் ஒன்று இருக்கிறது. என்டேர்டைன்மெண்ட் சேனல் என்கிற பெயரில் அபத்தமான குப்பைகளை பொழுது போக்கு என்கிற பெயரில் மணிக்கொரு முறை யூட்டுபில் உலவ விட்டு கொண்டிருப்பவர்கள்.அதிலும் காணொளிக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு ,படங்களோடு.
"இந்த பிரபல நடிகை இறந்து விட்டாரா?!!"
"பட்டப்பகலில் இந்த tv நடிகை செய்வதை பாருங்கள்!!"
"முன்னாள் காதலனுடன் கிளுகிளுப்பாக போட்டோ பிடித்த நடிகை"
இது போன்ற மூன்றாம் தர தலைப்புகள் கட்டாயம் இருக்கும்.அப்படி இல்லையென்றால் உலகில் யூட்டுப் சேனல்களை அப்பட்ட மாக காப்பியடித்த நிகழ்ச்சிகள்."இவர் ஹேண்ட்பேகில் என்ன இருக்கிறது?!! அய்யயோ இந்த பிரபலத்தின் பேகில் இதுவா!!!" போன்ற உலக தர நிகழ்ச்சிகள். ஆங்கர்கள் என்கிற பெயரில் இங்கீதம் மயிரு மட்டை இல்லாத ஒருவர் உட்கார்ந்து கொண்டு நடிகைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டிருப்பார்.
இது போன்ற சேனல்களில் இது தான் உழைப்பு, இதுதான் க்ரியேட்டிவிட்டி.
சில சமயம் அதீத உழைப்பை போடுவார்கள்.
காலை சேனலுக்கு வந்ததும் "மச்சி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? ஏதாவது celebrity வீடியோ வந்து இருக்கா? ஏதாவது மேட்டர் தேரறுமா " என்று கேட்டு விட்டு கண்ணில் மாட்டிய வீடியோ சண்டைகளை வைத்து உருட்ட ஆரம்பிப்பார்கள்.

BBC தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது ..கோவாக்சின்:

கோப்புப்படம்கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று (ஜூலை 21) சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் இடங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து சோதனை , ஏற்கனவே மற்ற மூன்று இடங்களில் தொடங்கிவிட்டது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயாள் ஷர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் முதல் முறை சோதனைக்கான மருந்து செலுத்தப்பட்டுவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் சாதித்த குடுகுடுப்பை சமூக மாணவி

தெய்வானையின் தேர்ச்சி குறித்து கேள்விப்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாணவியின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்தார்தெய்வானைபிரமிளா கிருஷ்ணன் - >பிபிசி தமிழ் : மதுரையில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 12ஆம் வகுப்பு தேர்வில் 500/600 மதிப்பெண்கள் வாங்கி, அவர் பயின்ற அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் சுமார் 50 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசிக்காமல் பயணம் செய்வது அல்லது ஒரு சில மாதங்கள் மட்டும் ஒரு இடத்தில் தங்குவது என நாடோடி சமூகமாக உள்ளனர்.
குறி சொல்லுவதற்காக பெற்றோரோடு பல ஊர்களுக்குச் சென்றுவந்த தெய்வானை, படிப்பிலும் அதிக ஈடுபாடுடன் இருந்ததால், திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
''என் சமூகத்தில் பெண்கள் பள்ளிப்படிப்பை முடிப்பது அரிதுதான். நான் ஒரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன். நான் பி.காம் படிக்கப்போகிறேன். வங்கியில் வேலை செய்வது என் கனவு. என் சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்,'' என்கிறார் தெய்வானை.

குவைத்தில் அகதிகளாய் விடப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள்!- இந்தியத் தூதரகத்தின் மெத்தனமே காரணம் என குற்றச்சாட்டு

hindutamil.in: :
indian-workers-displaced-in-kuwait-allegation-that-the-indian-embassy-is-laxகுவைத்தில் வேலைக்கான விசா காலம் காலாவதியான புலம்பெயர் தொழிலாளர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாக அறிவித்துவிட்டது குவைத் அரசாங்கம். எனினும், கரோனா காலம் என்பதால் இவர்களுக்குப் பொது மன்னிப்பு அளித்து, இரண்டு மாத காலத்துக்குள் அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் வாயிலாக அவசரகால பாஸ்போர்ட் பெற்றுத் தாயகம் திரும்ப வாய்ப்பளித்திருந்தது. ஆனால், அந்தக் கெடுவுக்குள் அவசர கால பாஸ்போர்ட்களை வழங்க இந்தியத் தூதரகம் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் இன்னமும் பெருவாரியான தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் குவைத்தில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ, “குவைத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைத் தங்களின் தாய்நாட்டுக்கு அனுப்ப எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு அவசரகால பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பங்களை அனுப்பி வைத்தோம்.

ஓபி சி 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மறுப்பு .. உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்க முடியும் ...

மாலைமலர் : 50 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும்- ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்.
மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.  ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில் இந்திய மருத்துவ கவுன்சில் சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
 இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் இவ்வழக்கு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.
 இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்யமுடியாது என்று பதில் அளித்துள்ளது.

கேரளா: `யு.ஏ.இ தூதரக பார்சல்; 13 முறை; 230 கிலோ தங்கம்!’ –

இவர்களும் முக்கிய சந்தேக நபர் சிவசங்கரும் பார்ப்பனர்கள்
vikatan.com- சிந்து ஆர் : தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில்
முக்கிய குற்றவாளியான பைசல் ஃபரீத் துபாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியா கொண்டுவந்து விசாராணை நடத்த என்.ஐ.ஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கடத்தல்காரர்களின் நெட்வெர்க்கை ஆதிமுதல் அந்தம் வரை கண்டறிய என்.ஐ.ஏ மற்றும் சுங்க அதிகாரிகள் துரித விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை நடந்த விசாரணையில் துபாயில் இருந்து பைசல் ஃபரீத் என்பவர் தங்கம் கடத்தும் பார்சலை யு.ஏ.இ தூதரகத்தின் பெயரில் அனுப்பி வைப்பதாகவும். யு.ஏ.இ தூதரக முன்னாள் பி.ஆர்.ஓ ஸரித் அந்த பார்சலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்வார்.

புது சேரியில் கலைஞர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்

MK Stalin thanks to Puducherry CM Narayanasamy
Puducherry Budget Session, Governor Bedi, Lt Governor Bedi, Puducherry, புதுச்சேரி கவர்னர் - முதல்வர் மோதல்:  விடிய, விடிய நடந்த கடிதப் போர்tamil.oneindia.com mathivanan-maran. : சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதுவையில் மாணவர்களுக்காக காலை டிபன் வழங்கும் திட்டத்தை அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு புரட்சி முதல்வர் என புகழாரம் சூட்டியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் இல்லாமலேயே பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்தது சர்ச்சையாகி உள்ளது.
இதனிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்த நாராயணசாமி ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், புதுவையில் மாணவர்கள் அனைவருக்கும் கலைஞர் கருணாநிதி பெயரில் காலை டிபன் - சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒரு அறிவிப்பு.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது

நடுவீதியில் மகளை கொடுரமாக கொன்ற தந்தை .. ஜோர்தான்

  (  file video) இலக்கிய :  ஜோர்தான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி வந்த 30 வயது அஹ்லம் என்ற பெண்ணை தந்தை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடியிருப்பில் இருந்து யாராவது காப்பாற்றுங்கள் என அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அவரை, துரத்தி வந்த தந்தை சிமென்ட் கட்டையால் தலையை குறிவைத்து தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்து தரையில் சரிந்த அஹ்லம், இறக்கும் வரை அந்த நபரால் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
மரண பயத்தில் அஹ்லம் அலறியதைக் கேட்டு தெருவில் கூடிய பொதுமக்கள் முன்னிலையில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
அஹ்லம் அவரது தாயாரிடம், கெஞ்சியும் அந்த தாயார் சிலையாக நின்றிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த தந்தையை தடுத்து நிறுத்த சிலர் முயன்ற போதும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறுகின்றனர்.

சீனா செல்ல காத்திருக்கும் ராமநாதபுரம் பரோட்டா மாஸ்டர்கள்.. கொரோனா ..: சொந்த ஊரில் வேலையில்லை

பரோட்டா மாஸ்டர்கள்பரோட்டா மாஸ்டர்கள்BBC : பிரபு ராவ் ஆனந்தன் - பிபிசி தமிழுக்காக >கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள அனைத்து தொழில்களும் அதனை சார்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நெருக்கடியால் சீனாவில் உள்ள உணவகங்களில் வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் புலியூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். கடந்த ஆறு மாதங்களாக வேலையின்றி சொந்த ஊர்களில் தவித்து வரும் இவர்கள் மீண்டும் சீனா திரும்பி செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறுகின்றனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரொனா

குடும்பத்தில் 4 பேருக்கு கொரொனா தனிமைப்படுத்தி கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்தினத்தந்தி : தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமது மாமனார்,  மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, குடும்பத்தினருடன் ராதாகிருஷ்ணன் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீமானை கடுமையாக எச்சரித்த நடிகை விஜயலட்சுமி .. தகாத வார்த்தைகளின் அர்ச்சனை .. வீடியோ


 ரமேஷ் சுப்பு : :  நடிகை விஜயலட்சுமி  மிகவும்  மனம் குழம்பி உள்ளார்.  இது சாதாரண மனிதர்களின் உள்வீட்டு பிரச்சனை என்று ஒதுங்கி போய்விட முடியாது . உள்வீட்டு பிரச்சனை என்றாலும் கூட மனித உரிமை மீறல் அளவுக்கு சென்றால் அது பொதுப்பிரச்சனை ஆகிவிடுகிறது.
இவர் குற்றம் சாட்டுவது ஒரு சாதாரண மனிதர் மீது அல்ல! .
ஒரு வாக்கு வங்கி உள்ள அரசியல் கட்சியின் தலைவர் மீது !
விஜயலட்சுமி  முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை.
இது வரையில் சீமான் விஜயலட்சுமிக்கு இழைத்த கொடுமைகளை ஒரு வேளை மறந்து மன்னித்து விடலாம் என்று கருதி விட முடியாது!
ஏனெனில் நடிகை விஜலட்சுமியின் உயிருக்கு  ஆபத்து உள்ளது  போல தெரிகிறது .
இரண்டு ஆண்டுகள் குடித்தனம் நடந்திவிட்டு ஏமாற்றி விட்டு ஓடிவிட்டார் சீமான் .
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்படும் போது சீமானின் அரசியல் வாழ்வு  முடிவுக்கு வந்துவிடும் நிலை உள்ளது.
இதன் காரணமாகவே வேறு யாரும்கூட இந்த சிக்கலில் சீமானை மாட்டி விட்டுவிட்டு சீமானின் கட்சியை கபளீகரம் செய்யலாம் அல்லவா?
ஏனெனில் சீமானின் அரசியல் ஒன்றும் கொள்கை சார்ந்தது அல்ல . வெறும் வசூலை நோக்கமாக கொண்ட புலி பிரசார அரசியல் .
அதில் வசூல் மட்டுமே உண்டு .
எந்தவித பொறுப்புணர்ச்சியும் அற்று வாயில் வந்ததை அள்ளி வீசலாம் . வருவது எல்லாமே வருமானம்தான்.
கடந்த சில ஆண்டுகளாக நடிகை விஜலட்சுமி கூக்குரல் போட்டுக்கொண்டே இருக்கிறார் .
ஆனால் ஒருவரும் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இதுதான் ஆபத்தானது . சீமானின் செல்வாக்கு பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.
அத்தனை பார்பன ஊடகங்களும் சீமானின் பிரசார பீரங்கிகளாக செயல்படுகின்றன.