Srinivasan J :
பிறந்து
வளர்ந்தது குக்கோ குக்கிராமம். 10 ம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளி. போஸ்ட் பாக்ஸ் டவுசரில் அங்கங்கே ஒட்டி மஞ்சப்பையுடன் முடித்தேன். 12 ம் வகுப்பு வெளியூர். பேண்ட் போட்டே ஆகவேண்டும் என்பதால் முதன் முறையாக ஒரே ஒரு பேண்ட் எடுத்து இரு வருடமும் அதே தான். முதன் முதலாக செருப்பும் அப்போதுதான்.. ரப்பர் செருப்பு. 1989 ம் வருடம்.. 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண். engineering medicine பற்றிய பெரிய அறிவு இல்லை. கலைஞர் மீண்டும் முதல்வராகிறார்.
20 சதவீதம் MBC இட ஒதுக்கீடு அளிக்கிறார். இட ஒதுக்கீடு என்றால் என்னெவென்றே தெரியாத வயது.. அதாவது ஊர். எல்லோரும் இன்ஜினியரிங், மெடிசின் அப்பளை பண்ணும்போது நானும் அப்பளை பண்ணேன். பின் மறந்தே போனேன். ஒரு நாள் நல்ல மழை.. கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. எங்கள் ஊரில் உள்ள போஸ்ட் மேன் வந்து ஒரு கவரை தருகிறார். பிரித்து பார்க்கிறேன். சேலம் பொறியிற் கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான கடிதம். பெரு மகிழ்ச்சி எல்லாம் அடையவில்லை. பெருமகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற அந்த அறிவு கூட இல்லை.



















