வியாழன், 15 ஜனவரி, 2015

BBC: சவுதி அரசு இஸ்லாமிய தீவிரவாதிகள் போல செயற்படுகிறது


தாராளவாத வலைப்பூ ஒன்றை நடத்தியதற்காக 1000 சவுக்கடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஒருவரின் மனைவி, சவுதி அரசாங்கம் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் போல செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தான் தஞ்சமடைந்துள்ள கனடாவில் இருந்து பேசிய அவர், அந்த சவுக்கடிகளை, ஷார்லி எப்தோ சஞ்சிகையின் மீதான தாக்குதல்களுடன் ஒப்பிட்டிருக்கிறார்.
நாளையும் ரஃபி பதாவிக்கு சவுக்கடி வழங்கப்படவுள்ளது

போடோ பயங்கரவாதிகளின் பின்னணி என்ன?


அசாமில் பூதாகாரமாக உருவாகியிருக்கும் பிரச்சினைகள்குறித்து நேரடி நிலவரம் பாகிஸ்தானில் 140-க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகளால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கிடைத்த மவுன அஞ்சலிகளும் எதிர்வினைகளும் அசாதாரணமானவை. ஆனால், இந்தியாவில் நெடுங்காலமாகத் தொடரும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான போடோ ‘மாகாண’ப் பகுதிகளில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடிகளுக்கு அதுபோன்ற அஞ்சலிகள் செலுத்தப்படவில்லை. இதைப் பற்றிய செய்திகள்கூட இரண்டு நாட்களுக்குப் பின்னரே பெரும்பாலும் வெளிவந்தன. ஓரிரு ஆங்கில தேசியச் செய்தி நிறுவனங்கள் தவிர்த்து, யாரும் பெரிதாகப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. அங்கும் சரியான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை.
போடோ ‘மாகாணம்’ என்பது அசாமின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது - கோக்ரஜார், சிராங், உதால்குரி மற்றும் பக்சா. இம்மாவட்டங்கள் போடோ ‘மாகாண’ ஆலோசனை சபைக்கு உட்பட்டது.

அவனியாபுரத்தில் போலீஸ் தடை! 21 சோதனை சாவடிகளில் வீரர்கள் நுழையாமல் தடுக்கப்படுகிறது

மதுரை அவனியாபுரத்தில் 21 சோதனைச்சாவடிகள் அமைத்து காளைகள், வீரர்கள் ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை விலக்க வும், மீண்டும் ஜல்லிக்கட்டு நடை பெறவும் தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இது வரை இறுதியான முடிவு எட்டப்பட வில்லை. இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம் (தை 1), பாலமேடு (தை 2), அலங்கா நல்லூர் (தை 3) ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. நேற்று இரவு வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்தோ, அரசிடமிருந்தோ எவ்வித உத்தரவும் கிடைக்காததால் அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.

கிரண் பேடி பாஜகவில் இணைந்தார்!


ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி பாஜக-வில் இணைந்துள்ளார். டெல்லியில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக பாஜக-வில் இணைந்தார்.மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய பாஜக-வில் இணைந்துள்ளேன்-கிரண்பேடிடில்லியில் செய்தியாளர்ளிடம் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, கிரண்பேடி பாஜக-வில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். அவரது வரவு டில்லி பா.ஜ.,விற்கு பலம் சேர்ப்பதாக அமையும். இது பாஜக-விற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில் : திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வரவேற்பதில் பா.ஜ. தயங்கியதில்லை என்றார்.nakkheeran.in

துப்பாக்கி உரிமம் பெறுவது இனி சுலபம்! லைசென்ஸ் முறை எளிமையாக்கபடுகிறது!

புதுடில்லி: துப்பாக்கி உரிமம் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 55 ஆண்டுகள் பழமையான, ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது, பாதுகாப்பு கருதி ஒருவர் துப்பாக்கி வைத்து கொள்ள விண்ணப்பிப்பதற்கு, ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுத்து, உரிமம் வழங்க காலக்கெடு எதுவும் இல்லை என்பதால், மாதக்கணக்கில், அவை கோப்புகளில் தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து, ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, துப்பாக்கி உரிமத்திற்கான நடைமுறைகளை எளிமையாக்கவும், உரிமங்களை விரைந்து வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக, வரும் பார்லிமென்ட் கூட்டத்தில், ஆயுதங்கள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.  ஏண்டா ஏன்? இந்தியா அமெரிக்காவா மாற வேண்டுமா? இனிமே ஸ்கூல் பசங்க எல்லாம் துப்பாக்கிய தூக்கிகிட்டு வந்து கிளாச்மேட்டை மிரட்டுவான்....டீச்சரை சுடுவான்..காலேஜ் பசங்க இதுவரைக்கும் கத்தி, அரிவாள் உருட்டுக்கட்டை வச்சு சண்டை போட்டுக்கிட்டு இருந்தானுங்க..இனிமே துப்பாகியோட வருவானுங்க... எல்லா அரசியல்வாதி கையிலயும் துப்பாக்கி இருக்கும்...அமெரிக்கா மாதிரி நாம சுட்டு சுட்டு விளையாடுவோமா? குப்பனுக்கும் சுப்பனுக்கும் லைசென்ச கொடுப்பதாக செய்தி இல்லை....

நீதிபதி கட்ஜுவின் ஜொள்ளு : நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும்; ஸ்மிருதியை விட சாத்வி அழகு

புதுடில்லி: திரைப்பட நடிகைகள் உள்ளிட்ட அழகான பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்துள்ளார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ. அத்துடன் நில்லாமல், நடிகை காத்ரினா கைப்பை அடுத்த ஜனாதிபதியாகவும் நியமிக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி.சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் மார்கண்டேய கட்ஜூ. சர்ச்சை கமெண்டுகளை அடித்து அவ்வப்போது மீடியாவின் பார்வையில் அடிபடுபவர் கட்ஜூ. இந்நிலையில், புதிதாக அவர் அடித்துள்ள கமெண்ட் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 14 ஜனவரி, 2015

ஆசாரம் பாபுவுக்கு எதிரான சாட்சி டெல்லியில் சுட்டு கொலை

சாபர்நகர்,ஜன.13 (டி.என்.எஸ்) ஆசாராம் பாபு மீதான பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சமையல்காரர் அகில் குப்தா உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அகில் குப்தா (35) தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது சாலையில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.ஆசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் சுட்டுக் கொல்லப்படும் இரண்டாவது நபர் இவர். ஏற்கனவே, ஆசாராம் பாபுவுக்கு நெருங்கிய உதவியாளராக இருந்த அம்ருட் பிரஜாபதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

ராஜபாளையத்தில் மர்மகாய்ச்சலை குணமாக்கிய நிலவேம்வு கஷாயம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி பகுதியில் 5 நாட்களில் 1 லட்சத்து 22 ஆயிரம் மக்கள் வைரஸ் காய்ச்சலை. அரசின் போர்கால நடவடிக்கைகளால் வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் வந்து நிலமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக இராஜபாளையம் நகராட்சி பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்காக சித்த மருத்துவ துறை குழுவின் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

12 அமைச்சர்களின் 21 வெளிநாட்டு பயணங்கள் ரத்து! சிக்கனம் சிக்கனம்?

புதுடில்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், 12 மத்திய அமைச்சர்களின், 21 வெளிநாட்டு பயண திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இது, மத்திய அமைச்சர்களின் மொத்த வெளிநாட்டு பயண திட்டங்களில் நான்கில் ஒரு பங்காகும். சிக்கனம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014 மே, 26ம் தேதி பதவியேற்றது. அது முதல், 'அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, மோடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயண திட்டங்கள் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் விவரம்: கடந்த, 2014 மே, 26 முதல் டிசம்பர் 26ம் தேதி வரை, மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக, 88 திட்ட முன்மொழிவுகள், பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், அமைச்சர்களின் தனிப்பட்ட பயணங்கள் உட்பட, 21 பயண திட்டங்கள் பிரதமர் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

லாபத்துக்காக நம்ம கேரியர்ல கை வைக்கிறாங்க : கிருத்திகா

நான் கிருத்திகா :டி.சி.எஸ்லதான் வேலை பார்க்கிறேன். அதாவது பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு டிசம்பர் 22-ம் தேதி காலையில ஒரு மின்னஞ்சல் வந்தது. உங்க திறமை குறைபாடு காரணமாக உங்களை இந்த புராஜக்டிலிருந்து விடுவிக்கிறோம் என்று சொல்லியிருந்தாங்க. ஆர்.எம்.ஜி (மனித வள நிர்வாகப் பிரிவு)-யுடன் தொடர்பு கொண்டு அடுத்த புராஜக்டை தேடிக் கொள்ளும்படி சொல்லியிருந்தாங்க.
பணி வாழ்க்கையை பலி கேட்கும் கார்ப்பரேட்டுகள்நான்தான் எங்க புராஜக்டோட லீட் (குழுவில் மூத்தவர்), 10 வருச எக்ஸ்பீரியன்சுக்குப் பிறகும் தினமும் நான் கோட் (நிரல்) எழுதுகிறேன், டெக்னிகல் (தொழில்நுட்ப) வேலை செய்றேன். எங்க புராஜக்ட்ல மிடில்வேர் (இடையீட்டு நிரல்) வேலையை நான் மட்டும்தான் பாத்துக்கிட்டிருந்தேன். அந்த புராஜக்ட்டோட லீடும் மூத்த டெவலப்பரும் நான்தான்.
டிசம்பர் 15-ம் தேதி எங்க புராஜக்டுக்கு இன்னொருத்தர டிரான்ஸ்பர் செஞ்சாங்க. “நமக்கு யூ.ஐ-ல (பயனர் இடைமுகம்) வேலை செய்றவங்கதான வேணும், இன்னொரு மிடில்வேர் ரிசோர்ஸ் எதுக்கு”ன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம புதுசா வந்தவருக்கு என்னோட வேலை எல்லாம் கத்துக் கொடுக்கும்படி சொல்லியிருந்தாங்க. நானும் சொல்லிக் கொடுத்தேன்.
எங்க அமெரிக்க கிளையன்ட் (வாடிக்கையாளர்) கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு பார்த்தா என்னை புராஜக்ட்லருந்து விடுவிக்கிறதா ஒரு மின்னஞ்சல். என்னோட பழைய வான் (பணிக்கான அடையாள எண்) வைச்சி லாக்-இன் பண்ண முடியல. பெஞ்ச் வான் பயன்படுத்தி லாக்-இன் செஞ்சேன்.

சென்னை போலீசின் மாமூல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்த மெக்கானிக் !

உழைத்து வாழும் நாம், மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும் காவல்துறைக்கு பணிவதா? டந்த 03/01/2015 அன்று மதியம் கீழ்ப்பாக்கம் G3 காவல்நிலைய வாசலில் 30 பேருக்கும் மேலாக மக்கள் திரண்டு, சலசலப்புடன் நின்று கொண்டிருந்தனர். கோபத்துடன் இருந்த அந்த மக்கள் சாலையை மறித்துவிடுவார்கள் என்ற பயத்தோடு 100 போலீசார் சுற்றி அரண் அமைத்து இருந்தனர்.
சுதர்சன் தற்கொலை - காரணமான போலீஸ் உதவி ஆய்வாளர்விசாரித்த பொழுது, 24 வயது, மெக்கானிக் ராஜ் என்ற சுதர்சனை காவல்துறை மாமூல் கூடுதலாக கேட்டு மிரட்டியதாலும், பொய் கேசுகள் தொடர்ச்சியாக போட்டும், அடி, உதை என சித்ரவதை செய்ததால் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார்கள்.
சுதர்சனின் தாயார் கோவிந்தம்மாள் கோபத்துடனும், அழுகையுடனும்
“நானும் என் மகன் சுதர்சனும் லேடர்ஸ் கேட் (Laders Gate), பிளவர்ஸ் சாலை, புரசைவாக்கம் பக்கத்தில் குடியிருக்கோம். நாலுவருசமா என் வீட்டுக்காரர் சுரேஷ், திவான் ராமா ரோட்டுல பைக் மெக்கானிக் கடை வைச்சிருந்தாரு!

ஜல்லிகட்டு தடை நீக்கம்? அறிவிப்பு வெளியாகும்!


மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையின் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் இன்று மதியம் டெல்லியின் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து அளித்தார்.
இதில், அவரிடம் ஜல்லிக்கட்டு பற்றி தமிழகத்தின் செய்தியாளர்கள் முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்தனர். இதற்கு சிரித்தபடியே நேரடியாக பதில் அளிக்காமல் ஜவடேகர் , ‘இது குறித்து விரைவில் ஒரு அரசு அறிவிக்கை வெளியாக உள்ளது’ என்று மட்டும் கூறிச் சென்று விட்டார். இது குறித்து ’தி இந்து’விடம் அதே விருந்தில் கலந்து கொண்ட அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை நீக்கி உத்தரவிடும்படி பிரதமர் நரேந்தர மோடி அறிவுறுத்தி உள்ளார். இதற்காக, நம் அமைச்சர் ஜவடேகரையும் நேரில் அழைத்து பேசினார். அதை தொடர்ந்து அதற்கான அரசு அறிவிக்கை வெளியிடும் பணி அதிரடியாக நடந்து வருவதால் அது, எந்நேரமும் வெளியாகும்.’ எனக் கூறுகின்றனர்.

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்கள்: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அரசு அலுவலகங்களில் இருந்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
'அரசு அலுவலகங்களில் யாருடைய புகைப்படங்களை எல்லாம் வைக்கலாம் என்பது தொடர்பாக அரசு ஒரு நிலையான கொள்கையை வகுக்க வேண்டும்.
தற்போது உள்ள நிலவரப்படி, அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் படத்தை வைத்துக்கொள்ளலாம் என்றே அரசு கொள்கை கொண்டுள்ளது.
எனவே, அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதா படங்களை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி தெரிவித்தார். முபார்க்கட்டும்  முதல்ல உயிரோடு இருக்கிற ஜெயலலிதாவின் தங்கை சைலஜா அண்ணன் வாசுதேவன் போன்றோரின் படத்தை பார்க்கட்டும் அப்புறம் அலுவலக படங்களுக்கு வரலாம்சொந்த சகோதர்கள் வறுமை இங்கே மகாராணி வேஷம்!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்க அரசு ஒப்புதல்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்படவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை முழுதும் ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இது குறித்து “பரிந்துரைகளை அமல் செய்வது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி தகவல் தெரிவியுங்கள்” என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து, இந்த விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.
  தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகள் பரிசீலனைகளும், பரிந்துரைகளும் மத்திய அரசினால் ஏற்றுக்கொண்டுவிட்ட பட்சத்தில், இதனை விரைவில் அமல் செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்யவும்” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

சசி தரூர் பாகிஸ்தானிய பெண் சிநேகிதியுடன் மூன்று நாட்கள் ஹோட்டலில் தங்கினார்.....


சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனையை சசிதரூர் நாடியுள்ளார். இதனையொட்டி அகமது படேலை சந்தித்தார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான சசிதரூரின் மனைவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையின் பேரில் சுனந்தா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் :எனக்கும் ஸ்டாலினுக்கும் மோதல் இல்லை!

 எனக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மோதல் இல்லை என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுகவின் பொதுக் குழு ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விளக்கப் பொதுக் கூட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கருணாநிதி பேசியது:
திமுக சுவரொட்டி ஒட்டும் இயக்கம் இல்லை. சமுதாய இயக்கம். திமுகவை வீழ்த்த சில கூட்டம் முயற்சிக்கிறது. அது நடக்காது. எனக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மோதல், எனக்கும் அன்பழகனுக்கும் இடையே மோதல் என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். அப்படிச் சொல்வதாலேயே நாங்கள் மோதிக்கொள்ள மாட்டோம். எங்களை மோதவிட வேண்டும் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்களை மோதவிடுவதில் நாங்கள் சமர்த்தர்கள். கற்றதைத் தற்போது மறந்து இருக்கிறோம். மீண்டும் அதில் எங்களை இறக்கிவிடாதீர்கள். என்னாங்க பொல்லாத தலையெழுத்து  மோதல்  இல்லை என்று  சொல்லவேண்டி இருக்கிறதே? மிகதெளிவாக கூறியிருக்கிறீர்கள்! நிச்சயமாக உங்களுக்குள் மோதல் இருக்கிறது!  

திங்கள், 12 ஜனவரி, 2015

பிரதமர் மோடி : இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புக்கள் கொட்டி கிடக்கின்றன!

 அரசு இந்தியப் பொருளாதாரத்தை சீர்தூக்க மேற்கொண்ட முயற்சியால் இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக 'எழுச்சி மிகு குஜராத்' மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொழில் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாக, குஜராத் மாநிலம் காந்திநகரில், 'எழுச்சி மிகு குஜராத்' 7-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தொடங்கி வைத்தார். உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இம் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களுக்கு வரவேற்பளித்தார். மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

Paris பிரமாண்ட பேரணி! பயங்கரவாதத்திற்கு எதிராக திரண்ட ஜனத்திரள்!

பாரிஸில் பயங்கரவாதத்திற்கு எதிரான  ஒற்றுமை பேரணி துவங்கியது. பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெறும் இந்த பேரணியில், அவர்களின் உறவினர்கள் தலைமையில் நடைபெறுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சார்லிஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களில் 3 நாட்கள் பயங்கரவாதிகள்நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். ஒருவர் தப்பியோடினார். அந்த நபரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்திற்கு அல்குவைதா இயக்கத்தினர் பொறுப்பு ஏற்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர், மக்களின் ஒற்றுமையே எங்கள்பலம். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறயிருந்தார்.

சென்னையில் இருந்து மும்பை சென்றவர்களில் தாப்சி மட்டுமே தாக்கு பிடிக்கிறார்

கோலிவூட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அசின், காஜல் அகர்வால், திரிஷா, தமன்னா, ஸ்ரேயா போன்றவர்கள் போன வேகத்திலேயே சுருண்டுவிட்டனர். மறுபடியும் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களில் அசின் மட்டும் தென்னிந்திய படங்களுக்கு திரும்பினால் எங்கே விமர்சனம் எழுமோ என்ற பயத்தில் பாலிவுட்டிலேயே வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவர்களின் வரிசையில் பாலிவுட்டுக்கு சென்றவர் டாப்ஸி. மற்ற யாரையும் விட தென்னிந்தியாவிலிருந்து இந்திக்கு வந்து அதிர்ஷ்டசாலி என்று பெயர் வாங்கி இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். தற்போது இந்தியில் 2, தமிழில் 2 படம் என 4 படங்களில் நடித்து வருகிறார்.இது குறித்து அவர் கூறும்போது, ‘பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் என்னை மனப்பூர்வமாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தென்னிந்தியாவில் பிரபலமாக இருப்பார்கள். அவர்களால் பாலிவுட்டில் தாக்கு பிடிக்க முடியாது. அந்த விஷயத்தில் நான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடித்ததில் சில படங்கள் ரிலீஸ் ஆகாதது ஏன் என்கிறார்கள். படம் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர் கையில்தான் இருக்கிறது. அதுபற்றி நான் கவலைப்படாமல் இருப்பதற்கு காரணம் அந்த படங்களும் எனக்கு அமைந்த நல்ல படங்கள்'  என்றார். - See more at: .tamilmurasu.org

A.R.ரஹ்மானுக்கு வருமானத்துறை கிடிக்கி பிடி! வருமானத்தை அவரது அறக்கட்டளைக்கு டைவேர்ட் பண்ணிய தில்லாலங்கடி?

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறது.தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் அமெரிக்க செல்போன் நிறுவனம் ஒன்றிற்கு ரிங் டோன் இசை அமைத்துத் தந்தார். அதற்கான சம்பளம் ஏ.ஆர்.ரஹ்மானின் அறக்கட்டளைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறையிடம் அறக்கட்டளை எவ்வித அனுமதியும் பெற்றிருக்கவில்லை என தெரிகிறது. அனுமதி பெறாமல் வெளிநாட்டு பண வர்த்தனையில் ஈடுபட்டதற்காக ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டிருக்கிறது.இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடிட்டர் கூறும்போது,‘குறிப்பிட்ட வெளிநாட்டு பண பரிவர்த்தனை நடந்திருந்தாலும் அப்பணம் முழுவதுமாக தேசிய வங்கியில்தான் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது‘ என்றார். ஆனாலும் இது வரி ஏற்புக்கு உரிய பரிவர்த்தனைதான் என வருமான வரி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. - See more at: .tamilmurasu.org

சுற்றுலா மற்றும் பயணக் கண்காட்சி : சென்னையில் தொடங்கியது


சென்னை,ஜன.09 (டி.என்.எஸ்)  இந்தியாவின் மிகப்பெரிய  டிடிஃப் (டிராவல் அன்டு டூரிஸம் கண்காட்சி) சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. மிக அதிகளவிலான டிராவல் மற்றும் டூரிஸம் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் பங்குபெறும் இந்த கண்காட்சி  ஜனவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வர்த்தக கண்காட்சியில் இந்தியாவின் 17 மாநிலங்களிலுருந்தும் மற்றும் 9 வெளிநாடுகளிலுருந்தும் 160 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வர்த்தக ரீதியான பயணப் பார்வையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை பகுதிவரை பார்வையிட ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் முதல் இக்கண்காட்சியினை அனைவரும் பார்வையிடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புத்தக கண்காட்சியில் குவிந்த வாசகர்கள்


சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) சார்பில், புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 21-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியின் 2-வது நாளான நேற்று (சனிக்கிழமை) புத்தகங்களை வாங்க பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். கண்காட்சிக்கு அமைக்கப்பட்டிருந்த அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.மக்களின் வசதிக்காக, கண்காட்சி அமைப்பாளர்கள் பிரத்யேகமான வாகன நிறுத்தங்களை அமைத்திருந்தனர். இந்த புத்தக கண்காட்சியின், 2-வது நாளான நேற்று பல்வேறு புதிய நூல்களின் வெளியீட்டு விழாக்கள் மற்றும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்களின், கவியரங்கங்கள், கருத்தரங்கங்களும், மாணவர்கள் பங்கேற்கும் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றன.

பதவி உயர்வுக்காக கடைசிவரை முயற்சித்த ஸ்டாலின்!

தி.மு.க.,வில் பதவி உயர்வுக்காக, ஸ்டாலின் கடைசி வரை, விடாமுயற்சி எடுத்த தகவல் வெளியாகி உள்ளது. பொதுக்குழுவுக்கு முன்தினம் இரவு, ஸ்டாலின் குடும்பத்தினர், கருணாநிதியை சந்தித்துப் பேசியும் பலன் அளிக்காமல் போன அதிருப்தியை, ஸ்டாலின் அடுத்த நாள் பொதுக்குழுவில் காட்டியதும் தெரிய வந்துள்ளது. விருப்பம்:தி.மு.க.,வில் பொருளாளராக உள்ள ஸ்டாலின், அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பது, அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் விருப்பம். அந்த ஆசை நிறைவேற, கட்சித் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர்.அதன் காரணமாக, கட்சியில் வட்ட, கிளை நிர்வாகிகள் துவங்கி, மாவட்ட செயலர்கள் வரையில், ஸ்டாலின் விரும்பியவரையே பதவிக்கு கொண்டு வந்தனர். இதற்காக, அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தினர். கட்சி நிர்வாகத்தில் உள்ள அத்தனை அமைப்புகளும், ஸ்டாலின் வசம் வந்து விட்ட நிலையில், அவரது பதவி நிலையும் உயர வேண்டும் என, எதிர்பார்த்தனர். திமுகவின்  கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு என்பதை ஸ்டாலின் கடமை : அழகிரி ஒழிக ! கண்ணியம் : நான்மட்டுமே திமுக ! கட்டுப்பாடு :துர்க்காவும் உதயநிதியும் மட்டுமே  என்று தவறாக புரிந்துகொண்டுவிட்டார்!

மதுரையில் 15 கிராமங்கள் 48 Km நீண்ட கிரானைட் கோட்டை கண்டுபிடிப்பு ! 26 ஆயிரம் விளைநிலங்கள் சுவாகா !

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இங்கு நடைபெற்ற யாவும் அதிகாரிகள்,மற்றும் அரசியல்வாதிகள் உதவி இல்லாமல் எதுவுமே நடைபெற முடியாது. இதில் சம்பாரித்த பணம் எல்லாமே இங்குதான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த அரசும்,இதற்கு முந்தய அரசும் தானே வெகு காலமாய் ஆண்டு கொண்டு இருக்கிறது. அதோடு இந்த இரண்டு அரசில் அனைத்து அதிகாரிகளும் இதில் அடங்குவார்கள் 

எருமாபட்டியில் துவங்கி செம்மினிப்பட்டி, புறாக்கூடு மலை, இ.மலம்பட்டி, கீழையூர், நாவினிப்பட்டி, பதினெட்டாம் குடி, கொட்டக்குடி, திருவாதவூர், இடையபட்டி, கருப்புக்கால், இளங்கிபட்டி, சிவலிங்கம், ராஜாக்கூர், கருப்பாயூரணி, கூடக்கோவில் வரை 48 கி.மீ., நீளத்தில் ஆங்காங்கே கிரானைட் கற்களை அடுக்கி கோட்டை எழுப்பி யாரும் உள்ளே புகுந்து விடாதபடி தடுத்து தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியதும் சகாயம் விசாரணையில் அம்பலமானது. இதனால் 26 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாழானது.
மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் 48 கி.மீ., நீளத்தில் கிரானைட் கற்களை அடுக்கி 'கிரானைட் கோட்டை' அமைத்தது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையில் நேற்று அம்பலமானது. கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று மதுரை மாவட்டம் இடையபட்டியில் விசாரணை நடத்தினார். 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியசூரியனேந்தல் கண்மாயில் 2009 முதல் 2011 வரை மீன் பிடிக்க பி.கே.மூர்த்தி என்பவர் ரூ.30 ஆயிரத்துக்கு டெண்டர் எடுத்தார். மீன் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், கண்மாயையொட்டி கிரானைட் குவாரி தனியாரால் துவக்கப்பட்டது. கண்மாயில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து கண்மாயை மூடிவிட்டனர். இடையபட்டி கல்லாங்குத்து கண்மாய் அருகே ஒருவர் இரண்டு ஏக்கர் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் அறுக்க 1995ல் அனுமதி பெற்றார். பின் கண்மாயில் 75 ஏக்கரில் கற்களை எடுத்தது சகாயம் விசாரணையில் தெரிந்து. மன்னர் கோட்டையா:சகாயம் கூறியதாவது: இது என்ன மன்னர் கோட்டையா? கண்மாயின் பவுண்டரி கற்கள் எங்கே? அரசு சொத்து ரூ.பல நூறு கோடி மதிப்புள்ள கற்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்தளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது. அதுகுறித்து யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இலங்கை : ஜோதிடர்களின் அளப்பரிய சேவையால்தான் இவ்வளவும் நடந்தது?

கை: எதற்கெடுத்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் கொண்ட ராஜபக்சேவுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும், என்று செய்ய வேண்டும்  என்பது முதல் கொண்டு அனைத்திலும் ஆலோசனை கூறி வந்த ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி புதைகுழியில் விழுந்து புதைந்து போய் விட்டார் ராஜபக்சே. நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் பலர் ஜோசியக்காரர்களை நம்பித்தான் நாட்களைக் கடத்தி வருகிறார்கள். அதேபோலத்தான் ராஜபக்சேவும். அவரும் ஜோசியம், நாள் நட்சத்திரம், அதிர்ஷ்டம், நல்ல நேரம் என அனைத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவரது ஆஸ்தான அதிர்ஷ்டக் கணிப்பாளராக பல காலமாக திகழ்ந்து வருபவர் சுமனதாச அபயகுணவர்த்தனா என்பவர் பார்க்க தெலுங்குப் பட காமெடியன் போல இருக்கும் இவர்தான் ராஜபக்சேவுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்பதைக் கணித்துக் கூறி வந்தவர். நல்ல சொகுசான, வசதியான ஜோசியரான இவர்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு ராஜபக்சேவுக்கு ஆலோசனை கூறியதாக சொல்கிறார்கள்.
இவரை நம்பித்தான் ராஜபக்சேவும் முன்கூட்டியே தேர்தலை வைத்தாராம். ஆனால் இப்போது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா நிலைக்கு ஆளாகி விட்டார் ராஜபக்சே. ராஜ ஜோதிடர் என்ற செல்லப் பெயர் கொண்டவர் இந்த அபயகுணவர்த்தனா.