செவ்வாய், 13 ஜனவரி, 2015

கலைஞர் :எனக்கும் ஸ்டாலினுக்கும் மோதல் இல்லை!

 எனக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மோதல் இல்லை என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுகவின் பொதுக் குழு ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விளக்கப் பொதுக் கூட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கருணாநிதி பேசியது:
திமுக சுவரொட்டி ஒட்டும் இயக்கம் இல்லை. சமுதாய இயக்கம். திமுகவை வீழ்த்த சில கூட்டம் முயற்சிக்கிறது. அது நடக்காது. எனக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மோதல், எனக்கும் அன்பழகனுக்கும் இடையே மோதல் என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். அப்படிச் சொல்வதாலேயே நாங்கள் மோதிக்கொள்ள மாட்டோம். எங்களை மோதவிட வேண்டும் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்களை மோதவிடுவதில் நாங்கள் சமர்த்தர்கள். கற்றதைத் தற்போது மறந்து இருக்கிறோம். மீண்டும் அதில் எங்களை இறக்கிவிடாதீர்கள். என்னாங்க பொல்லாத தலையெழுத்து  மோதல்  இல்லை என்று  சொல்லவேண்டி இருக்கிறதே? மிகதெளிவாக கூறியிருக்கிறீர்கள்! நிச்சயமாக உங்களுக்குள் மோதல் இருக்கிறது!  
தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை. வெறும் காட்சியே நடைபெறுகிறது என்றார்.
கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்: மின் கட்டண உயர்வு பற்றிக் கேட்டால், திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லையா
மாட்டோம். எங்களை மோதவிட வேண்டும் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்களை மோதவிடுவதில் நாங்கள் சமர்த்தர்கள். கற்றதைத் தற்போது மறந்து இருக்கிறோம். மீண்டும் அதில் எங்களை இறக்கிவிடாதீர்கள். தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை. வெறும் காட்சியே நடைபெறுகிறது என்றார்.
கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்: மின் கட்டண உயர்வு பற்றிக் கேட்டால், திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லையா என்று அமைச்சர் கேட்கிறார். திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தினோம் என்பது உண்மை. திமுக ஆட்சியில் ரூ.149.8 கோடி அளவுக்கு உயர்த்தினோம். இதில், 600 யூனிட் கீழ் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை.
ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.7,874 கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது 2-ஆவது முறையாக ரூ.6,850 கோடிக்கு உயர்த்தியுள்ளது.
அதோடு, அதிமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதைப் பட்டியலிட்டு விரைவில் திமுக சார்பில் பேரணி ஒன்றை நடத்த உள்ளோம்.
பேரணியின் இறுதியில் ஆளுநரிடம் மனு கொடுத்து, ஊழல்கள் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அளிக்க வலியுறுத்த உள்ளோம் என்றார் ஸ்டாலின்.
தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.பி.சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம் உள்பட பலர் பங்கேற்றனர  dinamani.com 

கருத்துகள் இல்லை: