புதன், 14 ஜனவரி, 2015

ராஜபாளையத்தில் மர்மகாய்ச்சலை குணமாக்கிய நிலவேம்வு கஷாயம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி பகுதியில் 5 நாட்களில் 1 லட்சத்து 22 ஆயிரம் மக்கள் வைரஸ் காய்ச்சலை. அரசின் போர்கால நடவடிக்கைகளால் வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் வந்து நிலமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக இராஜபாளையம் நகராட்சி பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்காக சித்த மருத்துவ துறை குழுவின் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


08.01.2015 முதல் இராஜபளையம் நகாராட்சியில் தொடங்கிய இப்பணியின் மூலம் 12.01.2015 வரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 20 மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

150-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விநியோக மையங்கள் மூலமாக மக்கள் எளிதில் பயனடைகின்றனர். மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தலைமையில், 20சித்தா மருத்துவர்களும், 10 மருந்தாளுநர்களும் 20 உதவியாளர்களும் மொத்தம் 50 பேர் மாவட்டம் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொது மக்களுக்கு நில வேம்பு எளிதில் கிடைக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை நிலையங்கள் தாலுகா மருத்துவ மனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் விலையில்லாமல் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பொது மக்கள் நில வேம்பு பொடியை மருத்துவ நிலையங்களில் இருந்து பெற்று தங்கள் வீடுகளிலேயே கசாயம் தயார் செய்து கொள்ளலாம். தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு இதை பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைரஸ் காய்ச்சல் பரவுவது முற்றிலுமாக தடுக்கப்படும். ஆகவே பொது மக்கள் நில வேம்பு பொடியை விலையில்லாமல் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.chennaionline.com

கருத்துகள் இல்லை: