வியாழன், 15 ஜனவரி, 2015

நீதிபதி கட்ஜுவின் ஜொள்ளு : நடிகை காத்ரினா கைப்பை ஜனாதிபதியாக்கணும்; ஸ்மிருதியை விட சாத்வி அழகு

புதுடில்லி: திரைப்பட நடிகைகள் உள்ளிட்ட அழகான பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்துள்ளார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ. அத்துடன் நில்லாமல், நடிகை காத்ரினா கைப்பை அடுத்த ஜனாதிபதியாகவும் நியமிக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி.சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் மார்கண்டேய கட்ஜூ. சர்ச்சை கமெண்டுகளை அடித்து அவ்வப்போது மீடியாவின் பார்வையில் அடிபடுபவர் கட்ஜூ. இந்நிலையில், புதிதாக அவர் அடித்துள்ள கமெண்ட் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அவர் கூறியுள்ளதாவது: குரோசியாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள கிரபார் கிடாரோவிக் மிகவும் அழகான பெண். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து அவர் குரோசியாவின் அதிபராகியுள்ளார். நம் நாட்டிலும் அழகிய பெண்கள் குறிப்பாக திரைப்பட நடிகைகள் அரசியலின் அனைத்து பதவிகளுக்கும் வரவேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனெனில், அரசியல் தலைவர்கள் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் மக்களின் நல்வாழ்வுக்கு எதுவும் செய்வதில்லை. அழகிய பெண்களை தேர்ந்தெடுத்தால், நல்லது நடக்காவிட்டாலும், அவர்களை அவ்வப்போது மீடியாக்களில் பார்த்தாவது சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

கட்ஜூவின் இந்த கமெண்ட் இத்துடன் நின்று விட வில்லை. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை விட, பா.ஜ., எம்.பி., சாத்வி நிரஞ்சன் ஜோதி மிகவும் அழகாக உள்ளார். ஸ்மிருதி இரானி பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டால், தனது உடல் எடையை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதியாக பாலிவுட் நடிகை காத்ரினா கைப்பை நியமிக்க வேண்டும். இதுவும் கட்ஜூ ஜொள்ளியது தான்.

கருத்துகள் இல்லை: