இசை
அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி
போட்டிருக்கிறது.தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை
அமைக்கிறார். சமீபத்தில் அமெரிக்க செல்போன் நிறுவனம் ஒன்றிற்கு ரிங் டோன்
இசை அமைத்துத் தந்தார். அதற்கான சம்பளம் ஏ.ஆர்.ரஹ்மானின் அறக்கட்டளைக்கு
டிரான்ஸ்பர் செய்யப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக
வருமான வரித்துறையிடம் அறக்கட்டளை எவ்வித அனுமதியும் பெற்றிருக்கவில்லை என
தெரிகிறது. அனுமதி பெறாமல் வெளிநாட்டு பண வர்த்தனையில் ஈடுபட்டதற்காக
ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை
திட்டமிட்டிருக்கிறது.இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடிட்டர்
கூறும்போது,‘குறிப்பிட்ட வெளிநாட்டு பண பரிவர்த்தனை நடந்திருந்தாலும்
அப்பணம் முழுவதுமாக தேசிய வங்கியில்தான் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது‘
என்றார். ஆனாலும் இது வரி ஏற்புக்கு உரிய பரிவர்த்தனைதான் என வருமான வரி
தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. - See more at:
.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக