செவ்வாய், 13 ஜனவரி, 2015

சசி தரூர் பாகிஸ்தானிய பெண் சிநேகிதியுடன் மூன்று நாட்கள் ஹோட்டலில் தங்கினார்.....


சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனையை சசிதரூர் நாடியுள்ளார். இதனையொட்டி அகமது படேலை சந்தித்தார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான சசிதரூரின் மனைவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையின் பேரில் சுனந்தா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


கொலையை உறுதி செய்வதற்காக சுனந்தாவின் உடல் மாதிரிகளை இங்கிலாந்துக்கு அனுப்பி சோதனை செய்யவும் சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சசிதரூர், சுனந்தா குடும்பத்தினர், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹ்தரர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சசிதரூர் பதவி விலக வேண்டும் என்றும், காங்கிரசை விட்டு நீக்க வேண்டும் என்றும் கேரள எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.சுனந்தாவின் நெருக்கமான தோழியான, டெல்லியை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் நளினி சிங் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி ண்டு ஜனவரி 20ம் தேதி அளித்த சாட்சியத்தில், இறப்பதற்கு முந்தைய தினம் சுனந்தா தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கூறியிருந்தார். சசிதரூருக்கும் மெஹ்தரரூக்கும் இடையே பரிமாறிக் கொண்ட காதல் செய்திகள் காரணமாக சுனந்தா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் சசிதரூர் தன்னை விவாகரத்து செய்து விடுவாரோ என்ற அச்சத்திலும் சுனந்தா இருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் துபாயில் சசிதரூரும், மெஹ்தரரூம் 3 நாட்கள் ஒன்றாக தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் சுனந்தாவிடம் இருந்தன. சுனந்தாவின் பிளாக்பெர்ரி போனில் இருந்த சில முக்கியமான தகவல்களை சசிதரூர் அழித்து விட்டதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என்றும் உதவி கேட்டார். சசிதரூருக்கு மெஹ்தரூர் தவிர வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்தது என்ற மனக்குறையும் சுனந்தாவுக்கு அப்போது இருந்தது என்று தெரிவித்திருந்தார். துபாயில் சசிதரூருடன் தங்கியது குறித்து மெஹ்தரர் கூறுகையில், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டேன். எங்களுடன் ஏராளமானோர் இருந்தனர். நானும் சசிதரூரும் தனியாக இருக்கவில்லை என்றார். இந்நிலையில் சுனந்தா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேலை சசிதரூர் சந்தித்தார். அப்போது சுனந்தா கொலை வழக்கு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கேரள அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் சசிதரூருக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுப்பது குறித்து எதுவும் பேசப்பட்டதாக தெரியவில்லை. இந்த சந்திப்பை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் சோனியா மற்றும் ராகுலை சந்தித்து சசிதரூர் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், சுனந்தா வழக்கில் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும், அது எனது கடமை என்றும் சசிதரூர் தெரிவித்தார்.எதிர்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கேர - See more at: /tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: