ஞாயிறு, 11 ஜனவரி, 2015

Paris பிரமாண்ட பேரணி! பயங்கரவாதத்திற்கு எதிராக திரண்ட ஜனத்திரள்!

பாரிஸில் பயங்கரவாதத்திற்கு எதிரான  ஒற்றுமை பேரணி துவங்கியது. பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெறும் இந்த பேரணியில், அவர்களின் உறவினர்கள் தலைமையில் நடைபெறுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சார்லிஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களில் 3 நாட்கள் பயங்கரவாதிகள்நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். ஒருவர் தப்பியோடினார். அந்த நபரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்திற்கு அல்குவைதா இயக்கத்தினர் பொறுப்பு ஏற்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர், மக்களின் ஒற்றுமையே எங்கள்பலம். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறயிருந்தார்.
இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பாரீஸ் நகரில் ஒற்றுமை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த பேரணி பிரான்ஸ் நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கியது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பாரீஸ் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5,500 பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த பேரணியில், பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், ஸ்பெயின் பிரதமர் ராஜேய். உக்ரைன் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நமது மதிப்பிற்கும் உரிமைக்கும் இந்த பேரணி நடைபெறுவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

இந்த பேரணி நடைபெற உள்ள நிலையில், பிரான்ஸ் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், இன்று உலகின் தலைநகராக பாரீஸ் மாறியுள்ளது. ஒட்டு மொத்தநாடே எழுச்சி பெற்று ஒற்றுமையுடன் இருந்து நமது சிறப்பை விளக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், இந்த பேரணி துவங்குவதற்கு முன்பு, வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்திய அமெதி கூலிபாலி இணையதளம் மூலம் வெளியிட்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியானது. அதில், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு மற்றும் தன் நண்பர்களும், தன் வழியை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளான். வீடியோவில் தோன்றியது வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தியவன் தான் எனவும், போலீசார் அதிரடியில் அவன் சுட்டு கொல்லப்பட்டவன்தான் எனவும் பிரான்ஸ் பயங்கர வாத எதிர்ப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: