ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பதவி உயர்வுக்காக கடைசிவரை முயற்சித்த ஸ்டாலின்!

தி.மு.க.,வில் பதவி உயர்வுக்காக, ஸ்டாலின் கடைசி வரை, விடாமுயற்சி எடுத்த தகவல் வெளியாகி உள்ளது. பொதுக்குழுவுக்கு முன்தினம் இரவு, ஸ்டாலின் குடும்பத்தினர், கருணாநிதியை சந்தித்துப் பேசியும் பலன் அளிக்காமல் போன அதிருப்தியை, ஸ்டாலின் அடுத்த நாள் பொதுக்குழுவில் காட்டியதும் தெரிய வந்துள்ளது. விருப்பம்:தி.மு.க.,வில் பொருளாளராக உள்ள ஸ்டாலின், அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பது, அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் விருப்பம். அந்த ஆசை நிறைவேற, கட்சித் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர்.அதன் காரணமாக, கட்சியில் வட்ட, கிளை நிர்வாகிகள் துவங்கி, மாவட்ட செயலர்கள் வரையில், ஸ்டாலின் விரும்பியவரையே பதவிக்கு கொண்டு வந்தனர். இதற்காக, அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தினர். கட்சி நிர்வாகத்தில் உள்ள அத்தனை அமைப்புகளும், ஸ்டாலின் வசம் வந்து விட்ட நிலையில், அவரது பதவி நிலையும் உயர வேண்டும் என, எதிர்பார்த்தனர். திமுகவின்  கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு என்பதை ஸ்டாலின் கடமை : அழகிரி ஒழிக ! கண்ணியம் : நான்மட்டுமே திமுக ! கட்டுப்பாடு :துர்க்காவும் உதயநிதியும் மட்டுமே  என்று தவறாக புரிந்துகொண்டுவிட்டார்!


தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் ஒத்துழைப்புடன் தான், இந்த உயர்வை ஸ்டாலின் அடைய முடியும் என்பதால், அதற்கான ரகசிய முயற்சிகள் நடந்தன. அதில், ஸ்டாலின் எதிர்பார்த்த ஒத்துழைப்பு, இருவரிடம் இருந்தும் கிடைக்கவில்லைமாவட்ட செயலர் நியமனத்தில், அன்பழகனின் சிபாரிசை கூட, பிடிவாதமாக ஸ்டாலின் ஏற்க மறுத்ததன் விளைவு தான் இது என, அவரது ஆதரவாளர்கள் புரிந்து கொண்டனர்.

ஒன்றரை மணி நேரம்:அதனால், 'பொருளாளர் பதவிக்குத் தான் போட்டியிட விரும்புகிறேன்' என, ஸ்டாலினே அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும், அவரது குடும்பத்தினரின் முயற்சி நிற்கவில்லை.பொதுக்குழுவுக்கு முன்தினம் இரவு, கருணாநிதியை அவரது வீட்டில், ஸ்டாலின் குடும்பத்தினர் சந்தித்தனர். ஒன்றரை மணி நேரம், இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:கடைசி நேர முயற்சியாக, இந்த சந்திப்பு கோபாலபுரத்தில் நடந்துள்ளது. 'நீங்களே முன்னின்று இதை செய்திருக்க வேண்டும்; அதை விடுத்து, அவரை வளர விடாமல் தடுக்கலாமா? நீங்கள் செய்யாமல் வேறு யார் வந்து, அவருக்கு செய்ய போகின்றனர்?' என, உருக்கமான பேச்சுகள் இடம் பெற்றுள்ளன.அதில் நெகிழ்ந்து போன கருணாநிதி, ஸ்டாலினுக்கு உயர் பொறுப்பு வழங்குவதற்கு, கட்சி விதிகளில் இடம் இருக்கிறதா என்பதை பார்ப்பதாகக் கூறியிருக்கிறார். பொதுச்செயலர் அல்லாமல், செயல் தலைவர் அல்லது துணைத் தலைவர் என, ஏதாவது ஒரு பதவி உருவாக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் ஸ்டாலின் குடும்பத்தினர் திரும்பி உள்ளனர்.

ஆனால், அடுத்த நாள் பொதுக்குழு துவங்குவதற்கு முன் வரையில், இது பற்றிய எந்த தகவலும் ஸ்டாலினுக்கு வந்து சேரவில்லை. கடும் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், நேராக பொதுக்குழு நடக்கும் அறிவாலய அரங்கத்திற்கு வந்து விட்டார். வழக்கமாக பொதுக்குழு நாளில், கோபாலபுரம் சென்று, கருணாநிதியை சந்தித்து, அவருடன் காரில் வருவார் ஸ்டாலின். அதிருப்தி காரணமாக, அதை தவிர்த்து விட்டார்.

வீட்டுக்கு வரவேண்டாம்:முன்னதாக, புதிய மாவட்ட செயலர்கள் அனைவரும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்து விட்டு, பொதுக்குழுவுக்கு வர விரும்பினர். அதையும் தடுத்த ஸ்டாலின், யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என கூறி விட்டார்.பொதுக்குழு முடிந்த பிறகும், அவர் தனியாக காரில் ஏறி, வீட்டுக்கு போய் விட்டார். கருணாநிதியுடன் கோபாலபுரம் செல்வதை, தவிர்த்து விட்டார்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: